டிரம்ப் டுவிட்டர் கணக்கை முடக்கிய குழுவின் தலைவர் ஒரு ‘இந்திய’ பெண்.. வெளியான பரபரப்பு தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை முடக்கிய குழுவின் தலைவர் ஒரு இந்திய பெண் என்ற தகவல் தெரியவந்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற முற்றுகை மற்றும் சர்ச்சை கருத்து வெளியீடு உள்ளிட்ட காரணங்களை அடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை அந்நிறுவனம் முழுமையாக முடக்கியது. இந்த நிலையில் அதிபர் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை முடக்கிய குழுவின் தலைவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த விஜயா கடே என்பது தெரியவந்து உள்ளது.
இந்தியாவில் பிறந்த விஜயா கடே தனது 3-வது வயதில் பெற்றோருடன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். அமெரிக்காவின் கார்னெல் பல்கலைகழகத்தில் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை பட்டமும், நியூயார்க் பல்கலைகழகத்தில் சட்ட படிப்பும் முடித்துள்ளார். தற்போது டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
The account of @realDonaldTrump has been permanently suspended from Twitter due to the risk of further violence. We've also published our policy enforcement analysis - you can read more about our decision here: https://t.co/fhjXkxdEcw
— Vijaya Gadde (@vijaya) January 8, 2021
இந்த நிலையில் டிரம்பின் டுவிட்டர் கணக்கு முடக்கியது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் விஜயா கடே பதிவிட்டுள்ளார்.