‘இதுக்கு பின்னாடி இவ்ளோ கதை இருக்கா..!’.. வைரலாகும் சிஎஸ்கே வீரரின் டாட்டூ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் ஆப்பிரிக்க வீரர் டு ப்ளசீ தனது உடம்பில் பதித்துள்ள டாட்டூக்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தென் ஆப்ரிக்க வீரரான டு ப்ளசீ, தன் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்களை தனது உடம்பில் டாட்டூ போட்டுக் கொள்ளும் பழக்கமுடையவர். அந்த வகையில் தற்போது தனது இடது விலா எலும்புக்கு மேல் ஒரு வார்த்தையை டு ப்ளசீ டாட்டூ போட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அதற்கு அர்த்தம் என்னவென்று புரியாமல் குழம்பி போயுள்ளனர்.
இந்த நிலையில் அதற்கான அர்த்தம் தற்போது வெளியாகியுள்ளது. உருது மொழியில் ‘ஃபஸல்’ என்று இருக்கும் அந்த வார்த்தைக்கான அர்த்தம் ‘கிருபை’ என்பதாகும். இதற்கு சர்வ வல்லமையுள்ள விசுவாசி என்று பொருள்படும். அதேபோல் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானதையும், டு ப்ளசீ தனது கையில் டாட்டூ போட்டுள்ளார்.
மேலும் டெஸ்ட் போட்டியில் அவர் அறிமுகமான அடிலெய்டு மைதானத்தின் பெயரையும் டாட்டூ போட்டுள்ளார். அதேபோல் தன்னுடைய திருமணம் நடந்து முடிந்த பின்பு ‘அகபே’ என்ற வார்த்தையை டு பிளசீ டாட்டூ போட்டுள்ளார். இந்த வார்த்தைக்கு நிபந்தனையற்ற அன்பு என்று பொருள்படும். தன் மனைவி மீது அளவற்ற அன்பை கொண்டுள்ளதை வெளிப்படுத்தவே அந்த வார்த்தையை டு பிளசீ டாட்டூ போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
