"என்ன மிருகம்ங்க இது?".. ஓநாய், நரிய குழப்பி அடிச்ச மாதிரி சாலையில் வலம் வந்த விசித்திர விலங்கு!!.. அரண்டு பார்த்த நெட்டிசன்கள்!!
முகப்பு > செய்திகள் > உலகம்இன்றைய காலகட்டத்தில் நம்மை சுற்றி உள்ள விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ள சோஷியல் மீடியா ஒரு முக்கிய தளமாக பார்க்கப்படுகிறது.
அதே போல சமூக வலைத்தளம் மூலம் விதவிதமான பல்வேறு விஷயங்களை குறித்தும் நம்மால் தெரிந்து கொள்ளவும் முடிகிறது.
அது மட்டுமில்லாமல் நாள்தோறும் ஏராளமான விஷயங்கள் வைரல் ஆகும் போது அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் குறித்து நெட்டிசன்கள் பலரும் பல விதமான கருத்துக்களையும் தெரிவித்து வருவார்கள். இவற்றுள் ஏராளமான வினோதம் மற்றும் மர்மம் நிறைந்த விஷயங்களும் அதிகம் உள்ளது பற்றி நம்மால் பார்க்க முடியும்.
அந்த வகையில், தற்போது அமெரிக்காவின் கலிஃபோர்னியா பகுதியில் சாலையில் திரிந்த ஒரு விலங்கு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் வைரல் ஆகி வரும் நிலையில் அது என்ன விலங்கு என்பது குறித்த கேள்வி எழுந்து பிறகு அதற்கான விளக்கமும் கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், காடுகளின் எல்லைகளை ஒட்டி அமைந்துள்ளது. அப்படி இருக்கும் நிலையில் அங்குள்ள சில மிருகங்கள் சாலைகளில் உலவுவது என்பது வழக்கமான ஒன்றாகும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அப்படி ஒரு சூழலில் தான், கலிஃபோர்னியாவில் உள்ள நகரில் விசித்திரமான காட்டு விலங்கு ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ அதிகம் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த மிருகம் ஓநாய், நரி, மான் உள்ளிட்ட விலங்குகளின் உடல் அமைப்புகளை தனித்தனியாக எடுத்து ஒத்தது போல் உள்ளது.
விசித்திர விலங்கு என இதனை பலரும் குறிப்பிட்டு வந்த நிலையில் அது உண்மையில் என்ன விலங்கு என்பது குறித்த தகவலும் தெரியவந்துள்ளது. சில விலங்கு ஆர்வலர்கள் கண்களில் இந்த வீடியோ பட, அதன் பெயர் மற்றும் குணங்கள் குறித்த விஷயமும் வெளியாகி உள்ளது.
அதன்படி, Maned Wolf என்ற இந்த விலங்கு, பார்ப்பதற்கு நரி மற்றும் ஓநாய் உள்ளிட்டவற்றின் கலவைகளை போல இருக்கும். அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் உள்ள சில வனப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் அரிய வகை விலங்கான மேண்ட் உல்ஃப், ஓநாயைப் போல துணிச்சலும், நரியை போல தந்திரமும், மான்களை போல கால்களும் உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
சாலையில் உலவிய வினோத விலங்கு குறித்து தெரிய வந்த தகவல் கூட பலரையும் மிரண்டு போக வைத்துள்ளது.
Does anyone know what the heck this is?!
🎥 via Imgur pic.twitter.com/FwBBJCfgb6
— Reg Saddler (@zaibatsu) December 3, 2022