WEIGHT-அ கொறச்சா போனஸ்.. ஆச்சர்யப்பட வைத்த CEO கொடுத்த முக்கியமான 5 அட்வைஸ்.. இத மட்டும் FOLLOW பண்ணா போதுமாமே..!
முகப்பு > செய்திகள் > இந்தியாநலமுடன் வாழ அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ளார் Zerodha நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான நிதின் காமத்.

நிதின் காமத்
இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டாக் மார்க்கெட் டிரேடிங் நிறுவனங்களில் ஒன்று Zerodha. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார் நிதின் காமத். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இயங்கக்கூடிய இவர், அன்றாட வாழ்க்கையிலும் உடல் நலத்தை பேணுவதில் ஆர்வம் கொண்டவர். தான் மட்டுமல்லாது தன்னுடைய ஊழியர்களையும் உடல்நலத்துடன் வாழ, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் நிதின். அதற்காக அதிரடி அறிவிப்புகளையும் சமீபத்தில் வெளியிட்டு சமூக வலை தளங்களை ஸ்தம்பிக்க செய்தவர்.
கடந்த செப்டம்பர் மாதம் தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் நிதின். அதில் உடல் நலத்தை சரியாக பேணும் ஊழியர்களில் ஒருவருக்கு 10 லட்ச ரூபாய் தொகையை பரிசாக அளிக்க இருப்பதாக அறிவித்திருந்தார். மேலும், உடல் சார்ந்த ஆக்டிவிட்டிகளை தொடர்ந்து முன்னெடுக்கும் ஊழியர்களுக்கு ஒருமாத ஊதியம் போனசாக வழங்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார் நிதின்.
போனஸ்
ஊழியர்களை பரவசத்தில் ஆழ்த்திய அந்த அறிவிப்பில், ஒரு நாளைக்கு குறைந்தது 350 கலோரிகளை குறைப்பது தான் சவால் என்றும், இருப்பினும் இந்த இலக்கு மாறுபடலாம் என்றும் தெரிவித்திருந்தார். Zerodha நிறுவனத்தின் ஃபிட்னஸ் டிராக்கர்களில், தினசரி இலக்குகள் அமைக்கப்படும் என்றும், இந்த இலக்கில் 90 சதவீதத்தை, நிர்ணயிக்கப்பட்ட நாட்களில் அடையும் ஒருவர் தனது ஒரு மாத சம்பளத்தை போனஸாக பெறுவார்கள் எனவும் கூறியிருந்தார். இந்த அறிவிப்பு சமூக வலை தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
அட்வைஸ்
இந்நிலையில், நெட்டிசன் ஒருவருடைய கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார் நிதின். அந்த பதிவில் ஒருவர்,"உடல்நலத்துடன் வாழ அன்றாட வாழ்க்கையில் நீங்கள் செய்யும் 2 - 3 நடவடிக்கைகள் என்ன? இது பிறருக்கும் உத்வேகமாக அமையும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த கேள்விக்கு பதில் அளித்திருக்கும் நிதின்,"தூங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகவே இரவு உணவை முடித்துவிடுவேன். அப்போதே செல்போனையும் ஒதுக்கி வைத்துவிடுவேன். தூங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் யோக நித்ரா அல்லது தியானம் செய்வேன். ஒருநாளைக்கு 12 மணிநேரம் விரதம் இருப்பேன். (இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரையில்) தினசரி ஆக்டிவிட்டிகளை ஆப்பிள் வாட்சில் செட் செய்துகொள்வேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதில் புரதங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
