8 மாச கொழந்த 'பசியில' மண்ண சாப்பிட்டிருக்கு... 'மனநலம்' பாதித்த தாய்... ஊரைவிட்டு ஓடிய தந்தை... அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Jun 18, 2020 08:27 PM

உணவு எதுவுமின்றி பசியில் 8 மாத குழந்தை மண்ணை சாப்பிட்ட கொடூரம் அதிர்ச்சி அளித்துள்ளது.

8 Months baby and his mother rescued from Tenkasi

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் ஆகியோரை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து பராமரித்து வரும் பணியை கடந்த 3 ஆண்டுளாக முகமது அலி என்னும் இளைஞர் செய்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு ஒரு போன் வந்துள்ளது. அதில் தென்காசி அருகேயுள்ள குத்துக்கல்வலசை என்னும் பகுதியில் உள்ள தாய் மற்றும் குழந்தை குறித்து அவரிடம் தெரிவித்து இருக்கின்றனர். இதையடுத்து அந்த வீட்டுக்கு சென்ற முகமது அலிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில் அந்த குழந்தையின் அம்மா மனநலம் பாதிக்கப்பட்டு பசியில் கதறிய குழந்தையை கூட கவனிக்காமல் இருந்திருக்கிறார். சுற்றிலும் குப்பைகளுக்கு மத்தியில் பசியில் அழுது மண்ணை சாப்பிட்டு அந்த குழந்தை கிடந்துள்ளது. இது எதுவும் தெரியாமல் அந்த குழந்தையின் அம்மா இருந்துள்ளார். இதையடுத்து அந்த குழந்தையையும், அம்மாவையும் போலீசார் உதவியுடன் மீட்டு அவர்களை காப்பகத்தில் தங்க வைத்துள்ளார்.

விசாரணையில் அவரின் பெயர் செல்வி என்பதும் அவருக்கு காசநோய் இருந்தது தெரிய வந்ததால், அவரின் கணவர் அவரைவிட்டு விட்டு ஓடிவிட்டதும் தெரிய வந்துள்ளது. 3 மாதங்களுக்கு முன்னால் அரசு அளித்த நிவாரண பணத்தை வைத்து குழந்தைக்கு சிப்ஸ் ஆகியவற்றை வாங்கி கொடுத்துள்ளார். பணம் தீர்ந்து போனதும் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நிலையில், கணவரும் ஓடிப்போக செல்விக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது.

செல்வியின் அம்மாவுக்கு போன் செய்து கேட்டபோது அவர்கள் மகள், பேரனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்து விட்டார்களாம். கடைசியாக கலெக்டரிடம் அனுமதி வாங்கி தற்போது கொரோனா சிறப்பு முகாமில் அவர்களை தங்க வைத்துள்ளனர். பசியில் இருந்த குழந்தை சாப்பிட்ட வேகத்தை நினைத்தால் இப்போது கூட புல்லரிக்குது என்று சொல்லும் முகமது அலி குழந்தையின் எதிர்காலத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும். இப்போ அதுக்கான பயணம் தொடங்கியிருக்கு என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

Tags : #CORONA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 8 Months baby and his mother rescued from Tenkasi | Tamil Nadu News.