'ஒரு நிமிஷம் பிபி எகிற வச்சிட்டியே டா'... 'இளைஞரின் சூட்கேஸை திறந்த அதிகாரிகள்'... விமான நிலையத்தை கதிகலங்க வைத்த இளைஞர்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஏர்போர்ட்டில் உள்ள அதிகாரிகள் உட்பட அனைவரையும் கதிகலங்க வைத்த 19 வயது இளைஞனின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் நாட்டின் மேற்கு லண்டனில் உள்ள இடம், ஹித்ரோ. அங்கிருக்கும் விமான நிலையத்திலிருந்து இத்தாலி செல்வதற்காக, கியோவிநசோ (வயது 19) என்ற இளைஞர் வந்துள்ளார்.
விமான நிலையத்தில் வழக்கம் போல நடைபெறும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அப்போது அவரது பையில் இருந்த பொருளைக் கண்டு அதிகாரிகள் அரண்டு போய்விட்டனர்.
உடனடியாக அப்பகுதியிலிருந்த பொது மக்கள் வெளியேற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து, கியோவிநசோ காவல்துறையால் அதிரடியாக சுற்றி வளைக்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு Bomb squad விரைந்தது. ஆம், அந்த இளைஞனின் பையில், கை எறி குண்டு கண்டெடுக்கப்பட்டது.
அதனை செயலிழக்க அதிகாரிகள் அங்கும் இங்குமாய் ஓடிக்கொண்டிருக்க, விமான நிலையமே பதற்றத்தில் இருந்தது.
ஆனால், நல்ல வேலையாக அந்த இளைஞன் கொண்டு வந்த கை எறி குண்டு ஏற்கெனவே செயலிழக்கப்பட்டிருந்தது.
எனினும், விமான நிலையத்திற்கு இது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து வரக் கூடாது என்று கூறி, கியோவிநசோவுக்கு அபராதம் விதித்ததோடு 2 மாத சிறை தண்டனையும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 19 வயது இளைஞன் எதற்காக இந்த (செயலிழந்த) கை எறி குண்டை விமான நிலையத்திற்கு எடுத்து வந்தான் என போலீசார் தீவிர விசாரணையில் உள்ளனர்.

மற்ற செய்திகள்
