“அட எதுல விளையாடனும் ஒரு வரமுர இல்லையா”?.. இந்த குழந்தையை அடகு வைத்தா எவ்வளவு பணம் கொடுப்பீங்க! தந்தையின் செயலால் பரபரப்பு! வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்By Arunachalam | May 11, 2019 03:41 PM
கைக்குழந்தையுடன் அடகு கடைக்கு சென்று குழந்தையை அடகு வைக்க வேண்டும் என்று கேட்ட தந்தையால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள அடகு கடைக்கு தன் கைக்குழந்தையோடு ஸ்லோகும் என்பவர் சென்றுள்ளார். அந்த அடகு கடையில் இருந்த ரிச்சர்ட் என்பவரை சந்தித்த ஸ்லோகும், தன் கைக்குழந்தையைக் காட்டி ‘இவனால் எனக்கு பெரிய பயன் இல்லை. இவனை எவ்வளவுக்கு வாங்குவீர்கள்’? என்று கேட்டுள்ளார். இதனை கேட்டதும் அதிர்ந்து போன ரிச்சர்ட் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
மேலும், இதுகுறித்து பேசிய அடகு கடைக்காரர் ரிச்சர்ட், “இது எவ்வளவு முக்கியமான விஷயம். ஸ்லோகும், கையில் குழந்தையை வைத்துக்கொண்டு இதனை என்னால் அடகு வைக்க முடியுமா? என்று சிரித்துக்கொண்டே கேட்டார்” என்று கூறினார்.
இந்நிலையில், பேசிய ஸ்லோகும், “நான் நகைச்சுவையாக கேட்டது அந்த கடைக்காரருக்கு புரியவில்லை, உடனே போலீசுக்கு போன் செய்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் ஸ்லோகுமை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
வீடியோ: https://www.facebook.com/SarasotaPoliceDepartment/videos/472108786662339/
