கடலில் விழுந்த ஹெலிகாப்டர்.. 12 மணி நேரம் கடலில் நீந்தி கரை சேர்ந்த அமைச்சர்.. எப்படி சாத்தியமானது?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Dec 22, 2021 08:04 PM

ஆப்பிரிக்க கண்டத்தின் தீவு நாடான மடகாஸ்கரில் சுமார 130 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று, இரு தினங்களுக்கு முன் இந்திய பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

madagascar minister swam 12 hours after helicopter crash

இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், கடலோர காவல் படையினர் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மேலும், இந்த விபத்தின் மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 60 - ஐ தாண்டியதாக கூறப்படும் நிலையில், 45 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், காணாமல் போன மீதமுள்ளவர்களைத் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில், மீட்பு பணிகளை பார்வையிடுவதற்காக, காவல்துறை மந்திரி செர்ஜ் கெல்லே, ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். அப்போது, இந்த ஹெலிகாப்ட்டர் மீட்புப் பணி நடைபெறும் பகுதிக்கு மேல் பறந்த போது, திடீரென ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டுள்ளது. மறுகணமே, இந்த ஹெலிகாப்டர் கடலில் விழுந்துள்ளது. இதனால், அதிலிருந்த காவலர்கள் மற்றும் மந்திரி ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து, ஹெலிகாப்டர் விழுந்த இடத்திலும் தீவிரமாக தேடுதல் வேட்டை நடந்தது. இந்நிலையில், மந்திரி செர்ஜ் கெல்லே மற்றும் ஒரு காவலர் ஆகியோர், சுமார் 12 மணி நேரம் கடலில் நீந்தி, கடற்கரை நகரமான மஹம்போவில் தனித்தனியாக கரையேறினர். அதிக நேரம், நீரில் நீந்தி வந்ததால், சோர்வுடன் காணப்பட்ட அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கபட்டது.  

மேலும், ஹெலிகாப்டர் கடலில் விழுவதற்கு முன்பாகவே, மந்திரி மற்றும் அந்த காவலர் வெளியே குதித்து விட்டனர். ஹெலிகாப்டரில் பயணித்த மேலும் இரண்டு காவலர்களைத் தேடும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனிடையே, கரைக்கு வந்து சேர்ந்த மந்திரி செர்ஜ் கெல்லே, ஈஸி சேர் ஒன்றிலிருந்து பேசும் வீடியோ, இணையதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.

 

இதுபற்றி காவல்துறை தலைவர் ரேவோவரி பேசுகையில், 'காவல்துறை மந்திரி கெல்லே ஹெலிகாப்டர் இருக்கையை மிதக்கும் பொருளாக பயன்படுத்தி நீந்தியே கரைக்கு வந்துள்ளார். அதிக ஸ்டாமினா உடைய கெல்லே, முப்பது வயது வாலிபரைப் போன்று, இப்போதும் உடற்திறனுடன் இருக்கிறார். அதனால் தான் அவரால் நீந்தி வர முடிந்தது' என தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுகளாக, காவல்துறையில் பணியாற்றிய கெல்லே, கடந்த ஆகஸ்ட் மாதம் மந்திரிசபை மாற்றத்தின் போது, காவல்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #MADAGASCAR #HELICOPTER CRASH #MINISTER #மந்திரி #கப்பல் விபத்து #ஹெலிகாப்டர் விபத்து #மடகாஸ்கர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Madagascar minister swam 12 hours after helicopter crash | World News.