பாஜக வீசிய பந்தில்... சிக்ஸர்களை பறக்கவிட்ட மனோஜ் திவாரி!.. முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு... முதல்வர் மம்தா கொடுத்த 'வாவ்' சர்ப்ரைஸ்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி, மேற்கு வங்க அரசியலில் புதிய இன்னிங்சை தொடங்கியுள்ளார்.

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பேனர்ஜி இன்று முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். இதில் அவருடன் சேர்ந்து 43 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் அந்த கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற மனோஜ் திவாரியும் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மனோஜ் திவாரி நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலின் போதுதான் அரசியலில் காலடி எடுத்து வைத்தார். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சிவ்பூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் தன்னை எதிர்த்து நின்ற பாஜக வேட்பாளர் ரத்தீன் சக்ரவர்த்தியை 32,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
நடந்து முடிந்த தேர்தலில் படு தீவிரமாக களமிறங்கி பிரச்சாரம் செய்த அவருக்கு மேற்கு வங்க மாநிலத்தின் இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் உறுதி மொழியுடன் பதவி ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக தேர்தலில் வெற்றி பெற்றவுடன் திவாரி பேசுகையில், நான் இந்த நேரத்தில் விளையாட்டு துறையை எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால், நான் எப்போதும் விளையாட்டுகளையும், விளையாட்டு வீரர்களையும் மேம்படுத்துவதற்காக உழைப்பேன் என தெரிவித்திருந்தார்.
35 வயதாகும் மனோஜ் திவாரி இந்திய அணிக்காக 12 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் ஒரு நாள் போட்டிகளில் 287 ரன்களும், டி20ல் 15 ரன்களும் மட்டுமே எடுத்துள்ளார். அதே போல ஐபிஎல்-ல் 98 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1695 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
