திரைப்பட பாணியில் கடத்தப்பட்ட அமைச்சர் உதவியாளர்.. பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பட்டப்பகலில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணணின் உதவியாளர் கத்தி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணணின் உதவியாளர் கர்ணன் இன்று காலை 11 மணியளவில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அன்சாரி வீதியிலுள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் இருந்துள்ளார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
சட்டமன்ற அலுவலகத்துக்குள் இருந்த கர்ணனை அந்த கும்பல் அடித்து வலுக்கட்டாயமாக கத்தி முனையில் காரில் கடத்தி சென்றுள்ளது. இந்த சம்பவங்கள் அனைத்தும் சட்டமன்ற அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் மாவட்ட எஸ்.பி திஷா மிட்டல், டிஎஸ்பி ரவிக்குமார் விசாரணை மேற்கொண்டனர். உடனே திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனிடையே சில கிலோமீட்டர் தொலைவில் கர்ணனை அந்த கும்பல் காரிலிருந்து இறக்கிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. திரும்பி வந்த கர்ணணிடன் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் அமைச்சரின் உதவியாளர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
