பாலைவன பூமியில் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை.. கொண்டாடிய மக்கள்.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிகவும் வெப்பமான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் குவைத்தில் ஆலங்கட்டி மழை பெய்திருப்பது அம்மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read | அம்பானி மகன் நிச்சயதார்த்தம்.. பிரம்மாண்ட விருந்தில் கலந்துகொண்ட நட்சத்திரங்கள்.. மணப்பெண் இவங்களா..?
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத் செல்வம் செழிக்கும் பிரதேசம். கச்சா எண்ணெய் உற்பத்தி இங்கே பிரதான வருமான மூலமாக இருக்கிறது. சவூதி அரேபியாவிற்கும் ஈராக்கிற்கும் நடுவே அமைந்து உள்ள சிறிய நாடான குவைத்தில் சமீப ஆண்டுகளில் வெப்பநிலை கணிசமான அளவு அதிகரித்திருந்தது. குவைத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு 54 டிகிரி வெப்பநிலை பதிவானது. கடந்த 76 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச வெப்பமாக இது கருதப்பட்டது. இதனால் காலநிலை மாற்றம் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுவரும் நிபுணர்கள் குவைத் மக்கள் வசிக்க முடியாத நாடாக மாறலாம் என சமீபத்தில் எச்சரிந்திருந்தனர்.
இந்நிலையில், குவைத்தில் கடந்த சில நாட்களாக குளிர் அதிகரித்திருக்கிறது. இதனிடையே அந்நாட்டின் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்திருக்கிறது. இதனால் அந்நாட்டு மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர். தரையில் கொட்டிக் கிடக்கும் பனிக் கட்டிகளை மக்கள் எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதனுடன் கடந்த சில நாட்களாக குவைத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நாட்டின் தெற்கு பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்ததாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இதுபற்றி பேசிய குவைத் வானிலை ஆய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் முஹம்மது கரம்,"கடந்த 15 ஆண்டுகளில் குளிர் காலத்தில் இவ்வளவு ஆலங்கட்டி மழையை நாங்கள் பார்த்ததில்லை" எனத் தெரிவித்திருக்கிறார். இதனிடையே 63 மில்லிமீட்டர் வரை மழை பெய்துள்ளதாகவும் ஆனால் வானிலை தெளிவாக உள்ளது என்றும் குவைத் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
குவைத்திற்கு தெற்கே சுமார் 50 கிலோமீட்டர் (30 மைல்) தொலைவில் உள்ள உம் அல்-ஹைமான் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்ததுள்ளனர். சாலைகளில் வெள்ளை போர்வை போர்த்தியது போல பனி கொட்டிக் கிடக்கும் வீடியோக்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.
#kuwait today pic.twitter.com/Ks8CuQBS1H
— Khaled Sulaiman (@ksulaiman) December 27, 2022