சீம்ஸ் நாயின் உடலில் ஏற்பட்ட சிக்கல் இதுதான்.. உரிமையாளரின் உருக்கமான பதிவு.. பிரார்த்திக்கும் நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இணையத்தில் பெரும் ரசிகர்களை ஈர்த்துள்ள சீம்ஸ் நாயின் உடல்நிலை குறித்து அதன் உரிமையாளர் பதிவிட்டிருக்கிறார். இதனையடுத்து, சீம்ஸ் நாய் குணமடைய நெட்டிசன்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.
![Kabosu aka Cheems Dog diagnose lymphoma leukemia Kabosu aka Cheems Dog diagnose lymphoma leukemia](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/kabosu-aka-cheems-dog-diagnose-lymphoma-leukemia.jpeg)
Also Read | கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்... பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்.. உலக தலைவர்கள் இரங்கல்..!
சிரமமான காரியத்தையும் எளிமையான வடிவில் மீம் மூலம் விளங்க வைத்துவிட முடியும் என்பதால் பலரும் இதனை விரும்புகின்றனர். அந்த வகையில் சமீப காலங்களில் பலரையும் ஈர்த்தது சீம்ஸ் எனும் நாய். இதன் புகைப்படத்துடன் கூடிய மீம்கள் வெடிசிரிப்பை வரவழைக்கக்கூடியவை. ஜப்பானை சேர்ந்த அஸ்துக்கோ சாடோ என்பவர் கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த பெண் நாயை வளர்க்க துவங்கியிருக்கிறார். அதற்கு கபோசு எனவும் அவர் பெயரிட்டிருக்கிறார்.
2010 ஆம் ஆண்டு இதன் உரிமையாளர் கபோசுவை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தினார். அப்போது இதனுடைய மிக அழகான போஸ்கள் சமூக ஊடகங்களில் வைரலாக தொடங்கியது. அந்த சமயத்தில் இந்த நாயின் வயது வெறும் 5 தான். இந்த நிகழ்விற்கு பிறகே கபோசுவின் படத்தை எல்லா மீம்களிலும் நெட்டிசன்கள் பயன்படுத்த தொடங்கினர். அதுமுதல் இணையதளங்களை இந்த நாய் ஆக்கிரமித்தது. தமிழக சூழலிலும் சீம்ஸ் என செல்லமாக அழைக்கப்படும் இந்த நாயை கொண்டு பல மீம்களை நெட்டிசன்கள் உருவாக்கி வந்தனர்.
இந்நிலையில் கபோசுவிற்கு உடல்நிலை சரியில்லை என அதன் உரிமையாளர் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நாய்க்கு கடுமையான சோலாங்கியோ ஹெபடைடிஸ் மற்றும் நாள்பட்ட லிம்போமா லுகேமியா நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்திருந்தார். மேலும், அதன் கல்லீரலில் ஏற்பட்ட சிக்கல் மோசமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் ஆண்டி பையாட்டிக் மருந்துகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தனது பதிவில் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, சீம்ஸ் நாயின் உரிமையாளர் தன்னுடைய சமீபத்திய பதிவில், தனது நாய் வழக்கம்போல சாப்பிடுவதாகவும், தண்ணீர் குடிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், வாக்கிங் செல்லும் அளவுக்கு அதன் உடல்நிலை தேறியிருப்பதாகவும் சீம்ஸ் நாய் குணமாக பிரார்த்தித்த அனைவர்க்கும் தான் மனமார்ந்த நன்றி கூறுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், சீம்ஸ் நாய் பூரண நலம்பெற வாழ்த்துவதாக நெட்டிசன்கள் அந்த பதிவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Also Read | அம்பானி மகன் நிச்சயதார்த்தம்.. பிரம்மாண்ட விருந்தில் கலந்துகொண்ட நட்சத்திரங்கள்.. மணப்பெண் இவங்களா..?
![](https://www.behindwoods.com/images/spacer.gif)