அம்பானி மகன் நிச்சயதார்த்தம்.. பிரம்மாண்ட விருந்தில் கலந்துகொண்ட நட்சத்திரங்கள்.. மணப்பெண் இவங்களா..?
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலக பணக்காரர்களில் ஒருவரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த விழா கோலாகலமாக நடைபெற்றிருக்கிறது.

Also Read | கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்... பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்.. உலக தலைவர்கள் இரங்கல்..!
முகேஷ் அம்பானியுடைய ரிலையன்ஸ் குழுமத்தில் எரிசக்தி துறையை தற்போது ஆனந்த் அம்பானி கவனித்து வருகிறார். சமீபத்தில் முகேஷ் அம்பானி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மகன் ஆனந்த் அம்பானிக்கு துபாயில் சொகுசு வீடு ஒன்றை வாங்கியிருந்தார். மேலும், ரிலையன்ஸ் குழுமத்தின் முக்கிய பொறுப்புகள் முகேஷ் அம்பானியின் மகன்கள் மற்றும் மகளுக்கு அளிக்கப்பட்டன. இந்நிலையில், ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
மும்பையை சேர்ந்த தொழிலதிபர் விரன் மெர்ச்சண்ட் மகள் ராதிகா மெர்ச்சண்ட். மும்பையில் பள்ளிக் கல்வியை முடித்த ராதிகா, அமெரிக்காவின் நியூயார்க்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்தார். அதன்பிறகு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர் பின்னர் தனது தந்தையுடன் இணைந்து பணியாற்ற துவங்கினார். இந்நிலையில், தற்போது தனது தந்தையின் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தில் இயக்குனராக இருக்கிறார் ராதிகா மெர்ச்சண்ட்.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகிய இருவருமே பள்ளிக்காலம் முதலே ஒன்றாக வளர்ந்தவர்களாம். இந்நிலையில், சமீப ஆண்டுகளில் அம்பானியின் குடும்பத்தில் ஒருவராகவே ராதிகா இருந்து வந்திருக்கிறார். இந்நிலையில், இருவருக்குமிடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. இதில் அம்பானி மற்றும் விரன் மெர்ச்சண்ட் குடும்பத்தினர் திரளாக கலந்துகொண்டனர். இதன்பிறகு மும்பையில் உள்ள அம்பானியின் வீட்டில் பிரம்மாண்ட பார்ட்டி நடைபெற்றது. இதில் நடிகர் ஷாருக்கான், ரன்பீர் கபூர் - ஆலியா பட், ஜான்வி கபூர், ரன்வீர் சிங், அயன் முகர்ஜி உட்பட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமணம் எப்போது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதனிடையே இந்த தம்பதிக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
Also Read | பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்.. பிரதமரின் உருக்கமான ட்வீட்..!
