இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே, அடேங்கப்பா..ஹாலிவுட் படம் போல் ஏவுகணை சோதனை நடத்தி மாஸ் காட்டும் வடகொரிய அதிபர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதை ஹாலிவுட் பட பாணியில் வீடியோ வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளது வடகொரிய ராணுவம்.
வட கொரியா..
கிழக்கு ஆசிய கண்டத்தில் தென் கொரியாவுக்கு வடக்கே அமைந்துள்ள நாடு வட கொரியா. 1945 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டிலிருந்து கொரியா நாடு சுதந்திரம் பெற்றது. அதன் பின் 1948 ஆம் ஆண்டு தென் கொரியா, வட கொரியா என இரு நாடுகளாக பிரிந்தது.
வட கொரிய அரசியல்..
வட கொரியாவை பொருத்தவரை அங்கே கொரிய தொழிலாளர் கட்சி என்ற ஒரே ஒரு அரசியல் கட்சி தான் உள்ளது. வட கொரியா பிரிந்த பின் கிம் II சங்க் என்பவர் ஆட்சியில் இருந்தார். அதற்கு பின்பு 1994 ஆம் ஆண்டு அவரது மகன் கிம் ஜாங் இல் ஆட்சிக்கு வந்தார். அதற்கு பிறகு 2011 ஆம் ஆண்டு கிம் ஜாங் இல்-ன் மகன் கிம் ஜாங் அன் ஆட்சிக்கு வந்து தற்போதும் நிலைத்துக்கொண்டிருக்கிறார்.
வட கொரிய உணவு பஞ்சம்..
உலகெங்கும் கொரோனா தொற்று பரவிய நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பொருளாதார சீர்குலைவால் வட கொரியா பெரும் உணவு பஞ்சத்தை சந்தித்தது. “குழந்தைகள் கடும் பட்டினியோடு தெருக்களில் இறந்து கிடந்தனர்” என சர்வதேச பத்திரிக்கைகளில் எல்லாம் செய்திகள் வெளிவந்தன.
வட கொரிய ஏவுகணை சோதனை..
2017 ஆம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த நாடாக வட கொரியா இருக்கும் என அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் அன் அறிவித்து வந்தார். இதனிடையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனை தொடர்ந்து வட கொரியா கடந்த ஆண்டு மட்டுமே 7 முறை ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. இது சர்வதேச நாடுகளில் பெரிதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. ஜப்பான், அமெரிக்கா, போன்ற நாடுகள் வட கொரியாவின் ஏவுகணை சோதனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக ஐநா சபை விதித்த தடைகளையும் வட கொரியா மீறியது.
ஹவாசோங் 17..
ஹவாசோங் 17 என்று பெயரிடப்பட்ட ஏவுகணையை கடந்த 24 ஆம் தேதி வட கொரியா சோதனை செய்தது. மிக நீண்ட தூரம் சென்று தாக்கும் அதி நவீன ஏவுகணை என இது கூறப்படுகிறது. மேலும் இது அமெரிக்க வரை சென்று தாக்கும் வல்லமை படைத்தது எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனையை ஹாலிவுட் திரைப்பட பாணியில் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை வட கொரிய ராணுவம் வெளியிட்டுள்ளது. இதில் கிம் ஜாங் அன் கருப்பு கண்ணாடி போட்டு ஸ்டைலாக நடந்துவர, ஏவுகணை பின்னால் வர, கிம் கவுண்டவுன் சொல்ல, ஏவுகணை விண்ணில் செலுத்தப்படுகிறது. பின்பு வீரர்களுடன் கிம் சிரித்துக் கொண்டே நடந்து வருகிறார். தற்போது இந்த வீடியோ சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது.