VIDEO: இந்த சந்தோஷத்தை பார்க்க ‘அவன்’ இல்லையே.. மேடையிலேயே ‘கண்கலங்கிய’ ஜோ பைடன்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது மகனை நினைத்து மேடையில் கண்கலங்கிய சம்பவம் அனைவரையும் உருக வைத்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வானார். அமெரிக்க சட்டப்படி நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் நபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்பது வழக்கம்.
அந்த வகையில் அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் நேற்று (20.01.2021) பதவி ஏற்றார். அவருடன் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக பதவி ஏற்றார். ஜோ பைடன் பதவியேற்பு விழாவின்போது டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என உளவுத்துறை எச்சரித்ததால் தலைநகர் வாஷிங்டனில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த நிலையில் பதவி பிரமானம் முடிந்ததும் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் குடிபெயர்வார். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அதுதான் அவரது வீடு. இதனால் தனது சொந்த மாநிலமான டெலாவேரில் ( Delaware) ஜோ பைடன் பிரியாவிடை கொடுத்தார். அப்போது பேசிய ஜோ பைடன், தான் அதிபராக பதவி ஏற்பதைப் பார்க்க தன் மகன் இல்லையே எனக் கூறி கண்கலங்கினார். பின்னர் டெலாவேர் மக்கள் அவர் நன்றி கூறினார். சில வருடங்களுக்கு முன்பு ஜோ பைடனின் மகன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.