'சம்பள குறைப்பு'...'எப்ப வேலையை விட்டு தூக்குவாங்கன்னு பயம்'... இப்படி இருந்த குடும்பஸ்தருக்கு அடிச்சுச்சு பாருங்க ஜாக்பாட்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Jul 04, 2021 01:25 PM

எந்த வேலை போகும், இல்லை சம்பளத்தை குறைப்பார்களோ எனப் பயந்து கொண்டே இருந்த நபருக்கு அடித்த ஜாக்போட் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Indian driver in Dubai wins Dh20m in Abu Dhabi Big Ticket draw

கேரளாவைச் சேர்ந்தவர் சோமராஜன். இவர் கடந்த 2008ம் ஆண்டு துபாய் வந்த நிலையில், பல நிறுவனங்களில் டிரைவர் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கொரோனா நெருக்கடி காரணமாகச் சம்பள குறைப்பு மற்றும் வேலை பறிபோகுமோ என்ற பயத்திலேயே இருந்துள்ளார். இந்த சூழ்நிலையில் சமீபத்தில் இவர் லொட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார்.

Indian driver in Dubai wins Dh20m in Abu Dhabi Big Ticket draw

அதற்கான லொட்டரி குலுக்கல் நேற்று  நடைபெற்றுக் கொண்டிருந்த போது, இவர் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து காய்கறிகளை வாங்கச் சென்றுள்ளார். அதற்கிடையில், லாட்டரி குலுக்கலுக்கான நேரலையைக் கேட்டபடி இருந்துள்ளார். இதில் மூன்றாம்(1 மில்லியன் திர்ஹான்) மற்றும் இரண்டாம் பரிசு(3 மில்லியன் திர்ஹான்) அறிவிக்கப்பட்ட போது, இவர் பெயர் இடம் பெறவில்லை. இதனால் சோகத்தில் அங்கிருந்த மசூதியைப் பார்த்து, இந்த முறையும் தவறவிட்டுவிட்டேன் என்று சோமராஜன் கூறியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் அவருடைய எட்டு வயது மகன் இந்த லொட்டரி குலுக்கலைத் தொடர்ந்து நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தனது தந்தை சோமராஜனுக்கு போன் செய்து அப்பா நீங்க ஜெய்ச்சிட்டீங்க எனக் கூறியுள்ளார். ஆனால் சோமராஜனுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது தான் அப்பா, நீங்கள் வாங்கிய லொட்டரி எண் 349886(முதல் பரிசு 20 மில்லியன் திர்ஹான்) விழுந்துள்ளது எனக் கூறி சந்தோஷத்தில் கத்தியுள்ளான்.

Indian driver in Dubai wins Dh20m in Abu Dhabi Big Ticket draw

இதனால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போன சோமராஜன், ''எனது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த லொட்டரி டிக்கெட் வாங்குவேன். நான் எப்போதும் என் சொந்த தொழில் செய்ய விரும்பினேன். நான் எனது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பின் இந்த பரிசுத் தொகையை என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்யவுள்ளேன்'' என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Indian driver in Dubai wins Dh20m in Abu Dhabi Big Ticket draw | World News.