‘மில்க்ஷேக்கிங்’ போராட்டமா..? இது என்னடா மில்க்ஷேக்குக்கு வந்த சோதனை..!
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | May 21, 2019 03:43 PM
பிரிட்டனில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும் வலதுசாரி கட்சிகளின் வேட்பாளர்கள் மீது மில்க்ஷேக்குகளை வீசித் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது.

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வரும் 23-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரங்களில் வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பிரச்சாரத்தின்போது வலதுசாரி கட்சிகளின் வேட்பாளர்கள்மீது மில்க்ஷேக்குகள் மற்றும் ஐஸ்கிரீம்கள் போன்றவற்றை வீசி எதிர்ப்பைத் தெரிவிக்கும் போராட்டங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக, பிரச்சாரம் நடைபெறும் பகுதிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் மில்க்ஷேக்குகள் மற்றும் ஐஸ்கிரீம்கள் விற்பதை நிறுத்துமாறு அந்நாட்டு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து சில உணவகங்களிலும், கடைகளிலும் ‘காவல்துறையின் வேண்டுகோளின்படி இன்று இங்கு மில்க்ஷேக்கோ ஐஸ்கிரீமோ விற்கப்படாது’ என அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது.
