இன்னும் கொஞ்ச நாளுல தெரியும்... 'டிரம்ப்' எடுக்கும் அடுத்த 'மூவ்'... 3 லட்சம் இந்திய 'ஐ.டி' ஊழியர்கள் நெலம 'கஷ்டம்' தான்?!
முகப்பு > செய்திகள் > உலகம்மற்ற நாடுகளை விட கொரோனா தொற்று மூலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் வரலாறு காணாத அளவில் வேலையின்மை ஏற்பட்டு வரும் நிலையில், ஹெச் 1பி விசாவில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்னும் ஒரு சில நாட்களில் ஹெச் 1பி குறித்து மேற்கொள்ளப்படும் கடுமையான நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் ஹெச் 1பி விசா மூலம் அமெரிக்காவில் பணிபுரிந்து வருவதால் அவர்கள் மீதான நடவடிக்கையை கடுமையாக்கும் போது அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு வேலலையில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதற்காக தான் டிரம்ப் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த ஹெச் 1பி விசாவானது மற்ற நாடுகளில் இருந்து நல்ல திறமை வாய்ந்தவர்களுக்கு கொடுக்கப்படும் விசா ஆகும். குறிப்பாக ஐ.டி நிறுவனங்களில் திறமை வாய்ந்தவர்களுக்கு இந்த விசா அதிகம் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் இந்தியர்கள் தான் அதிகம். இந்த விசா மூலம் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள், பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை ஆண்டு தோறும் பணியமர்த்தி வருகிறது. இதனால் வருடத்திற்கு சுமார் 85,000 பேர் அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்து வருகின்றனர்.
அதே போல, தற்காலிகமாக குடியேற்றத்தினையும் தடை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த ஹெச் 1பி விசா மீதான புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்தால் முதலில் பாதிக்கப்படுவது இந்தியா தான். கிட்ட தட்ட மூன்று லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், ஏற்கனவே விசா காலம் முடிவடைந்தால் அதனை புதுப்பிக்க முடியாமல் அவர்கள் நாடு திரும்பும் நிலை ஏற்படும்.
அதோடு, புதிய விசாக்களையும் தற்காலிகமாக தடை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில், புதிதாக இனி விசா கிடைப்பது கடினமான ஒன்றாக மாறி விடும். ஏற்கனவே இந்தியாவில் பல முன்னணி ஐ.டி மற்றும் இதர நிறுவனங்கள், ஊரடங்கின் காரணமாக பல ஊழியர்களை வேலையை விட்டு தூக்கியுள்ளது. அதே நேரத்தில் இன்னும் சில நிறுவனங்கள் சம்பள குறைப்பு நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் வேலையிழந்து வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை காரணமாக இந்திய பங்கு சந்தைகளில் ஐடி நிறுவனங்களின் பங்குகள் பலத்த வீழ்ச்சி காணலாம் என்றும் கருதப்படுகிறது. மிகவும் கடினமான இந்த சூழ்நிலையில், அமெரிக்காவிலுள்ள இந்திய ஐ.டி ஊழியர்களின் நிலை மிகவும் கடினமே.

மற்ற செய்திகள்
