காதலர்கள் மத்தியில் வைரலாகும் "காதல் தீவு".. வாங்குவதற்கு போட்டிபோடும் கோடீஸ்வரர்கள்.. எங்கப்பா இருக்கு?.. சுவாரஸ்ய தகவல்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்காதலர்களை பெருமளவு ஈர்த்துள்ள காதல் தீவை விற்பனை செய்ய முடிவெடுத்திருக்கிறது குரோஷியா நாடு. இதனால் கோடீஸ்வரர்கள் பலரும் அதனை வாங்க முயற்சி செய்து வருகின்றனர்.
Image Credit : REUTERS/Antonio Bronic
Also Read | ஒரு ஓவருக்கு 7 பந்தா?.. இந்தியா - பாகிஸ்தான் மகளிர் உலகக்கோப்பை போட்டியில நடந்த சர்ச்சை சம்பவம்..!
இன்று (பிப்ரவரி 14) உலகம் முழுவதும் காதலர் தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர்கள் இன்றைய தினத்தில் ஒருவருக்கொருவர் அன்பை பிரதிபலிக்கும் விதமாக பரிசுகளை பரிமாறிக்கொள்வது வழக்கம். தங்களது காதல் இணையருக்கு என்ன பரிசு அளிப்பது என பல நாட்களாகவே குழப்பங்களும் தேடுதலும் காதலர்களிடத்தில் துவங்கிவிடும். இப்படி உலகம் முழுவதும் காதல் தொடர்பான விஷயங்கள் பிப்ரவரி மாதம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்துவதும் உண்டு. இந்த சமயத்தில் காதலர்களுக்கு மத்தியில் வைரலான காதல் தீவை விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது குரோஷியா.
Images are subject to © copyright to their respective owners.
தென் கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது குரோஷியா. இங்குள்ள பஸ்மான் கால்வாயில் ஏராளமான சின்னஞ்சிறிய தீவுக் கூட்டங்கள் இருக்கின்றன. சுற்றுலா வாசிகளின் சொர்க்கபுரியாக திகழும் இந்த இடத்தில் அமைந்துள்ள கேலெஸ்ஞ்ஜாக் (Galesnjak) காதலர்களை எளிதில் வசீகரித்துவிடும். ஏனெனில் இது இதயம் போன்ற வடிவில் அமைந்திருக்கிறது. இதனாலேயே பலரும் இந்த தீவுக்கு வந்து செல்ல விருப்பப்படுகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
மனிதர்கள் யாரும் வசிக்காத இந்த தீவு 142,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இந்நிலையில் இந்த தீவை விற்பனை செய்ய அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள இந்த விற்பனை பிரிவின் அதிகாரி சில்வெர்ஸ்டா கார்டூம்," ஒவ்வொரு ஆண்டும் இந்த தீவு மில்லியன் கணக்கில் புகைப்படம் எடுக்கப்படுகிறது. தீவில் ஹோட்டல்கள், வில்லாக்கள் அல்லது உணவகங்கள் என எதுவும் இல்லை. ஆனால் பல பிரபலங்கள் ஒவ்வொரு கோடைகாலத்திலும் கேலெஸ்ஞ்ஜாக்கிற்கு வந்து செல்கின்றனர். பியோன்சி தனது 39 வது பிறந்தநாள் விழாவைத் தீவில் வைத்திருந்தார். அவர் ஒவ்வொரு வருடமும் பல நாட்கள் அல்லது வாரங்கள் கூட இங்கே இருப்பார். கடந்த ஆண்டு மைக்கேல் ஜோர்டான் இங்கே வந்திருந்தார். அதேபோல ஜெஃப் பெசோஸும் இங்கு வந்திருக்கிறார்" என்றார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்த தீவின் விலையாக 13 மில்லியன் யூரோ நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த தொகை உள்ளூர் நலனுக்காக முதலீடு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தீவினை வாங்க பலரும் தன்னை தொடர்புகொண்டு வருவதாகவும் கார்டூம் தெரிவித்திருக்கிறார். காதலர்கள் மத்தியில் வைரலான இந்த தீவை வாங்கப்போவது யார்? என்பது கூடிய விரைவில் தெரிந்துவிடும்.
Also Read | "கல்யாணத்துக்கு விமானத்துல தான் போறோம்".. மொத்த டிக்கெட்டையும் புக் செய்த மணமகன்.. வைரலாகும் வீடியோ..!