பாதி நாய், பாதி மனுஷன்??.. "மீன் பிடிக்க போனவரு.." கரைக்கு அந்த பக்கம் பார்த்த காட்சி.. "புஸ்ஸுன்னு காணாம போயிடுச்சாமே"

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Jul 31, 2022 07:32 PM

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் மீன் பிடிக்க சென்ற போது, பார்த்த சம்பவம் ஒன்று தொடர்பான வீடியோ ஒன்று, இணையவாசிகள் மத்தியில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

Half man half dog creature video confuse netizens

அவ்வப்போது, இணையத்தில் ஏதாவது வினோதமான அல்லது நம்பக் கூட முடியாத அளவில், ஏதாவது வீடியோக்கள் அல்லது செய்திகள் வெளியாகி, பலரையும் பதற்றத்திற்குள் ஆக்கும்.

அப்படி ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தான், தற்போது இணையத்தில் ஒருவரால் பகிரப்பட்டு, நெட்டிசன்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர், அருகே உள்ள நதி ஒன்றிற்கு மீன் பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த ஆற்றின் மறுகரையில், வினோதமான ஒரு சம்பவத்தை கண்டுள்ளார். அதாவது, நான்கு கால்களில் இருந்த படி, அங்கே நீரைக் குடித்துக் கொண்டு இருந்த உருவம், திடீரென இரண்டு கால்களில் எழுந்து, பின்னர் அங்கிருந்த புல்களுக்கு மத்தியில் மறைந்து காணாமல் போயுள்ளது.

இது தொடர்பான வீடியோவை வீட்டிற்கு சென்று அந்த நபர் கண்ட பிறகு, அவர் திடுக்கிட்டு போயுள்ளார். அதாவது, பாதி நாய் மற்றும் பாதி மனிதன் போல அந்த உயிரினம் தெரிந்ததாகவே கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவையும் அந்த நபர் இணையத்தில் வெளியிடவே, பலரும் அதனைக் கண்டு மிரண்டு போயுள்ளனர்.

Bigfoot, Werewolf போன்ற மனித உள்ளுணர்வு கொண்ட வினோத உயிரினங்களாக இருக்கும் என்றும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். உதாரணத்திற்கு கிங்காங் போன்ற மிருகம் மற்றும் மனிதனின் சக்தி கலந்த வகையில் அவை இருக்கலாம் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட உயிரினங்கள் தொடர்பாக நிறைய கதைகள் மட்டுமே உலவி வரும் நிலையில், அதனை மனிதர் ஒருவர் வீடியோவாக எடுத்து பல கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து நிறைய ஆய்வாளர்களும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஆனால், அதே வேளையில் இந்த மர்ம உயிரினம், ஒரு பெரிய வடிவை கொண்ட குரங்காக இருக்கலாம் என்றும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். கதைகளில் மட்டுமே பலரும் கேட்டு வரும் விசித்திர உயிரினங்கள், தற்போது நேரில் தோன்றியதாக வலம் வரும் வீடியோ, பலரையும் குழப்பத்தில் தான் அதிகம் ஆழ்த்தி உள்ளது.

Tags : #CREATURE #MYSTERY #HALF DOG

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Half man half dog creature video confuse netizens | World News.