73 வருசமா நீடிச்ச 'மர்மம்'.. "இறந்து போனவரு பெயரே இப்ப தான் தெரிய வந்துருக்கு.." பரபரப்பு பின்னணி

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Jul 28, 2022 10:32 PM

சுமார் 73 ஆண்டுகளாக நீடித்து வந்த மரணம் தொடர்பான மர்மம் விலகி உள்ளதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Somerton man mystery solved after 7 decades sources

கடந்த 1948 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் அடலெய்டு பகுதியில் உள்ள கடற்கரை ஓரம், டிப் டாப் ஆக ஒரு நபர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அவர் யார் என்பது குறித்த விவரம் எதுவும் தெரியாமல் இருந்த நிலையில், அவரது ஆடைகளில் கூட எந்த விதமான பிராண்ட்டின் டேக்குகளும் இல்லை. மேலும் அவரது பாக்கெட்டில் ஒரு பயன்படுத்தப்படாத ரெயில் டிக்கெட் ஒன்றும், ஒரு சீப்பும், ஜீவிங் கம், சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளது. மேலும் பெர்ஷியன் வாக்கியம் கொண்ட ஒரு சிறிய தாளின் குறிப்பு அவரது பாக்கெட்டில் இருந்துள்ளது. அதிலிருந்த

பெர்ஷியன் வாக்கியத்தின் படி, "இது முடிந்து விட்டது" என்று அர்த்தம் இருந்துள்ளது.

Somerton man mystery solved after 7 decades sources

தொடர்ந்து, அவர் விஷத்தால் உயிரிழந்திருக்கலாம் என்றும், ஆனால் விஷம் எடுத்துக் கொண்டதற்கான ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த சமயத்தில் உடலை பரிசோதித்த ஆர்வலர்கள், அடையாளம் தெரியாத நபரின் மரணம் இயற்கையானது இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

சில ஆண்டுகளுக்கு பின்னர், அவர் ஒரு உளவு வேலை பார்த்து வந்ததாகவும் சில தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், எந்தவித தகவலும் அவர் யார் என்பதை உறுதிப்படுத்தவில்லை. சுமார் 73 ஆண்டுகளாக மர்மமான அந்த நபர் யார் என்பதே தெரியாமல் இருந்து வந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு, அவர் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில், அவரின் உடலை தோண்டி எடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், Derek Abott என்ற ஆராய்ச்சியாளர் ஒருவர், அதிநவீன DNA தொழில்நுட்பம் மூலம், இந்த மனிதன் யார் என்பதை கண்டுபிடித்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகளால் பாதுகாக்கப்பட்டுள்ள அந்த நபரின் முடியை எடுத்து, அமெரிக்காவின் புகழ் பெற்ற தடயவியல் நிபுணர் Colleen Fitzpatrick என்பவருடன் இணைந்து Abott பணியாற்றியுள்ளார்.

இறுதியில் அந்த அடையாளம் தெரியாத அந்த நபரின் முடியின் டிஎன்ஏ மூலம் ஃபேமிலி ட்ரீயை புனரமைத்து அந்த நபர் யார் என்பதை கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அந்த நபரின் பெயர் Carl Webb என்பதும், கடந்த 1947 ஆம் ஆண்டு விவாகரத்து ஆன பின்பு அவர் காணாமல் போனதாகவும் Abott தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 1905 ஆம் ஆண்டு பிறந்த அந்த நபர், Dorothy Robertson என்பவரை திருமணம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். 43 வயதில் அவர் இறந்ததாக கூறப்படும் நிலையில், எலக்ட்ரிக்கல் இன்ஜினியராகவும் பணிபுரிந்து வந்துள்ளதாகவும் இவர்களின் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

Somerton man mystery solved after 7 decades sources

ஆய்வாளர்கள் 73 ஆண்டுகளின் மர்மத்திற்கு விடை தெரிவித்தாலும், சவுத் ஆஸ்திரேலியா போலீசார் இது பற்றி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Tags : #SOMERTON MAN #MYSTERY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Somerton man mystery solved after 7 decades sources | World News.