ஆசையா மீன் ஆர்டர் செஞ்ச கஸ்டமர்.. தட்டில் வந்த மீனை பார்த்ததும் அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜப்பான் உணவகத்தில் மீன் ஆர்டர் செய்த நபருக்கு அதிர்ச்சி அளித்த மீனின் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த 13வது ஆள் யாரு? இம்ரான் கானின் ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்திய ஒற்றை புகைப்படம்.? முழு தகவல்..!
ஜப்பான்
தீவு நாடான ஜப்பானில் கடல் உணவுகள் மிகவும் பிரசித்திபெற்றவை. இங்கு உள்ள மக்களும் மீன், இறால் உள்ளிட்ட கடல் உணவுகளை விரும்பி உண்ணும் வழக்கம் கொண்டவர்கள். அப்படியான மீன் பிரியர் ஒருவர் உணவகத்தில் ஆர்டர் செய்த மீன் திடீரென செய்த காரியம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
உயிர் மீன்
இன்ஸ்டாகிராம் பிரபலமான டகாஹிரோ (Takahiro) என்பவர் சமீபத்தில் ஜப்பானில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சென்றிருக்கிறார். அங்கே மீன் ஆர்டர் செய்திருக்கிறார் இவர். சற்று நேரத்தில் Takahiro கேட்டபடியே மீனும் பரிமாறப்பட்டு உள்ளது. சாலட் இலைகள் சூழ அலங்கரிக்கப்பட்ட தட்டில் மீனை கொண்டுவந்து Takahiro விடம் கொடுத்திருக்கிறார்கள் உணவக ஊழியர்கள்.
காத்திருந்த அதிர்ச்சி
தனக்கு பிடித்த மீனை சாப்பிட ஆயத்தமாகியிருக்கிறார் Takahiro. அப்போது சாப் ஸ்டிக் மூலமாக மீனை எடுக்க Takahiro முற்பட, தட்டில் இருந்த மீன், வாயை அகல திறந்து ஸ்டிக்கை கவ்வி பிடித்திருக்கிறது. இதனால் ஷாக்காகி இருக்கிறார் அந்த மீன் பிரியர். உடனடியாக தனது சாப் ஸ்டிக்கை கவ்விய மீனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
வைரல் வீடியோ
தட்டில் பரிமாறப்பட்ட மீன் சாப் ஸ்டிக்கை கவ்வி பிடித்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி இருக்கிறது. இதுவரையில் ஒரு லட்சம் மக்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். மேலும், 'இது உண்மையாகவே சமைக்கப்பட்டது தானா? அல்லது உயிருடன் சாப்பிட போகிறீர்களா?' எனவும் 'வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிகழ்வு' எனவும் நெட்டிசன்கள் இந்த வீடியோவில் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
ஆசையாக மீன் ஆர்டர் செய்த நபருக்கு பரிமாறப்பட்ட மீன், சாப் ஸ்டிக்கை கவ்விய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Virat Kohli : கேட்சை பிடிச்சுட்டு வித்தியாசமான ரியாக்ஷன் கொடுத்த கோலி.. வைரலாகும் Pic..!

மற்ற செய்திகள்
