'தடுப்பூசி இன்னும் போடலியா'?.... 'ரொம்ப SORRY'... 'பிஜி நாட்டு அரசு வெளியிட்ட அறிவிப்பு'... ஆடிப்போன ஊழியர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்தடுப்பூசி மட்டுமே கொரோனா வைரசுக்கு எதிரான ஆயுதமாக தற்போது உள்ளது.

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு எதிராகப் பலரும் நம்பிக் கொண்டு இருப்பது தடுப்பூசியை மட்டுமே. எனவே உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி செலுத்துவதிலும், தயாரிப்பதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
இந்நிலையில் தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பிஜியில் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் அரசு வேலையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டுப் பிரதமர் பிராங்க் பைனிமராமா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கொரோனா தடுப்பூசி போடாவிட்டால், அரசு வேலை இல்லை. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும்.
ஆகஸ்டு 15-தேதிக்குள் தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். நவம்பர் 1-ம் தேதிக்குள் இரண்டாவது டோஸ் செலுத்த வேண்டும். அப்படிச் செய்யவிட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்'' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
