'இந்தியா உட்பட 85 நாடுகள்'... 'இத கண்டுக்காம விட்டா பெரிய ஆபத்து'... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jun 25, 2021 12:41 PM

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.1’ வைரசுக்கு காப்பா என்றும், ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Delta variant now reported in 85 countries globally

சீனாவின் உகான் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ், உருமாறி வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் எனப் பல நாடுகளில் உருமாறிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.1’ வைரசுக்கு காப்பா என்றும், ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Delta variant now reported in 85 countries globally

இந்த உருமாறிய வைரஸ்கள் பற்றிய வாராந்திர தொற்றுநோயியல் அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், பிரேசில் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘பி.1’ வைரஸ் கமா, 71 நாடுகளைத் தாக்கி உள்ளது. இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.2’ வைரசான டெல்டா, 85 நாடுகளில் தன் கைவரிசையைக் காட்டி உள்ளது. இவற்றில் 11 நாடுகளில் 2 வாரங்களில் பரவி இருக்கிறது.

கவலைக்குரிய உருமாறிய வைரஸ்களான ஆல்பா, பீட்டா, கமா, டெல்டா ஆகிய 4 வைரஸ்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன. ஆல்பா வைரசைக்காட்டிலும் டெல்டா வைரஸ் கணிசமாகப் பரவக்கூடியதாகும். இதை ஜப்பான் ஆய்வு காட்டுகிறது. இதே போக்கு தொடர்ந்தால் இந்த வைரஸ் ஆதிக்கம் செலுத்தும் கொரோனாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Delta variant now reported in 85 countries globally

எனவே மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே டெல்டா வைரசுக்கு எதிராக பைசர் பயோஎன்டெக் தடுப்பூசியும், அஸ்ட்ரா ஜெனகோ தடுப்பூசியும் வலுவாகச் செயல்படும் என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Delta variant now reported in 85 countries globally | India News.