தமிழகத்தில் ஜூலை 5ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!.. புதிய தளர்வுகள் அறிவிப்பு!.. எவை இயங்கும்?.. எவை இயங்காது?.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
![tamil nadu lockdown extended till july 5 new relaxations details tamil nadu lockdown extended till july 5 new relaxations details](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/tamil-nadu-lockdown-extended-till-july-5-new-relaxations-details.jpg)
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஜூலை 5 ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
11 மாவட்டங்களில் மேலும் தளர்வுகள்
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர் மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்.
மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, நாமக்கல் மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்.
காலை 6 முதல் மாலை 7 மணி வரை தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி.
காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை மின் சாதனங்கள் விற்பனைக்கு அனுமதி.
ஹார்டுவேர் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி.
கல்வி புத்தகங்கள், எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கும் அனுமதி.
பாத்திர கடைகள், ஃபேன்சி, அழகு சாதன பொருட்கள், போட்டோ, வீடியோ கடைகளுக்கும் அனுமதி.
ஜெராக்ஸ், சலவை, தையல் அச்சகங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 வரை செயல்பட அனுமதி.
மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள் செயல்பட அனுமதி.
23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி.
மதுரை, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி.
சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பத்தூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி.
திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் மாவட்டங்களிலும் பொது போக்குவரத்துக்கு அனுமதி.
23 மாவட்டங்களுக்கு இடையே 50% இருக்கைகளுடன் பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி.
4 மாவட்டங்களில் மேலும் சில தளர்வுகள்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி
கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதி
அர்ச்சனை, திருவிழாக்கள், குடமுழுக்கு நடத்த அனுமதி கிடையாது
அனைத்து நகை கடைகளும் குளிர்சாதன வசதியின்றி 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.
4 மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நகை கடைகள் செயல்பட அனுமதி.
குளிர்சாதன வசதியின்றி அனைத்து துணி கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.
4 மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து துணி கடைகள் செயல்பட அனுமதி.
தனியார் நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி.
வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி.
திரையரங்குகள், விளையாட்டு கூடங்கள் செயல்பட அனுமதியில்லை என அறிவிப்பு.
வகை 2, வகை 3 - பொதுவான தளர்வுகள்
சென்னை உள்பட 4 மாவட்டங்கள் மற்றும் 23 மாவட்டங்களில் பொதுவான தளர்வுகள்
உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் 50% நபர்களுடன் செயல்பட அனுமதி.
காலை 10 - மாலை 5 மணி வரை அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் செயல்பட அனுமதி
அனைத்து கடற்கரைகளிலும் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சி செய்ய அனுமதி.
தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
மாவட்டங்களுக்கு இடையே திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ பாஸ் - இ பதிவு தேவையில்லை.
வகை 1ல் உள்ள 11 மாவட்டங்களுக்கு திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ பாஸ் அவசியம்.
நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்கு இ பாஸ் பெற்று பயணிக்க அனுமதி.
வீடு பராமரிப்பு சேவைகளுக்கு இ பதிவு இல்லாமல் செயல்பட அனுமதி.
பிளம்பர், மின் பணியாளர், தச்சர் போன்ற சுய தொழில் செய்பவர்கள் இ-பதிவு இல்லாமல் பணிபுரிய அனுமதி.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)