'அந்த பையன் நெட்ல பார்த்த வீடியோக்கள்'... 'GOOGLE HISTORY மூலம் வெளிச்சத்திற்கு வந்த உண்மை'... அதிரவைக்கும் தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Sep 08, 2021 01:29 PM

தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் Ahamed இணையத்தில் பார்த்த வீடியோ தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Auckland Attacker made disturbing internet searches

நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்தின் பிரபல சூப்பர் மார்க்கெட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 7 பேர் காயமடைந்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இந்த தாக்குதலை நடத்திய Ahamed Aathill Mohammad Samsudeen என்ற இளைஞரைச் சுட்டுக் கொன்றார்கள்.

Auckland Attacker made disturbing internet searches

இந்த சூழ்நிலையில் Ahamed குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் Ahamed இணையத்தில் தொடர்ந்து எது போன்ற வீடியோக்களை பார்த்தார், போன்ற தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தனது நண்பருடன் ஆக்லாந்தில் உள்ள டார்கெட் ஷுட்டர் கடைக்கு சென்ற Ahamed, அங்கு 25 சென்டிமீட்டர் நீளம் கொண்ட கத்தியைப் பார்த்து அது குறித்து விசாரித்துள்ளார்.

Auckland Attacker made disturbing internet searches

அதோடு அந்த கத்தியை கொரியரில் தனது வீட்டுக்கு அனுப்ப முடியுமா எனவும் கடை உரிமையாளரிடம் கேட்டுள்ளார். கையேடு அந்த கத்தியை வாங்கிக் கொண்டு செல்ல விரும்பாத Ahamed, ஒரு வேளை தனது கையில் இருக்கும் கத்தியை யாராவது பார்த்து, தன்னை மோசமான நபர் என நினைத்துக் கொள்ளக் கூடாது கூறியுள்ளார். இதற்கிடையே அந்த கத்தி தனது கையில் கிடைத்த நிலையில் இணையத்தில் Islamic state dress, Enemies of Allah, Isis allegiance, Heroes of the Islamic state போன்ற விஷயங்களைத் தேடியுள்ளார்.

Auckland Attacker made disturbing internet searches

முக்கியமாக Safety and security guidelines for lone wolf mujahedeen என்ற விஷயத்தை  இணையத்தில் தேடியிருக்கிறார். lone wolf என்றால் தனிநபராக வன்முறை செயல்களைத் திட்டமிட்டுச் செய்யும் ஒரு செயல் ஆகும். இது தவிர பொது இடத்தில் கத்தியை வைத்து எப்படி ஒருவரைத் தாக்குவது, கத்தியின் மூலம் இன்னும் எவ்வளவு கொடுமையான செயல்களைச் செய்யலாம் எனப் பல கொடூரமான விஷயங்களை Ahamed இணையத்தில் தேடியுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளார்கள்.

Tags : #AUCKLAND

மற்ற செய்திகள்