Kaateri logo top

"அன்னைக்கு ஒரே நைட்ல எல்லாம் மாறிடுச்சு.. காலைல கண்ணாடில முகத்தை பார்த்தப்போ".. வாடகை வீட்டில் குடியேறிய தம்பதிக்கு ஏற்பட்ட பயங்கரம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Aug 02, 2022 07:18 PM

இங்கிலாந்தில் ஒரு குடும்பத்தினர் தங்கியிருந்த வீட்டில் பயங்கரமான அனுபவங்களை சந்தித்திருக்கின்றனர்.

family flee haunted home after suffering unexplained bruises

Also Read | திடீர்னு ஏற்பட்ட பிரம்மாண்ட துளை.. நடுங்கிப்போன மக்கள்.. ஆராய்ச்சியாளர்களையே அதிர வச்ச சம்பவம்.. உள்ளே அப்படி என்ன இருக்கு?

இங்கிலாந்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது மிடில்ஸ்பரோ பகுதி. இங்குள்ள ஒரு வீட்டுக்கு கடந்த நவம்பர் மாதம் லாரன் - ஸ்டிபன் தம்பதி குடிபெயர்ந்திருக்கிறது. இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் இருக்கின்றனர். துவக்கத்தில் எல்லாம் நல்லபடியாகவே இருந்திருக்கிறது. ஆனால், டிசம்பர் மாத துவக்கத்தில் வீட்டில் இருந்தவர்கள் வினோதமான பல சம்பவங்களை கவனிக்க துவங்கியிருக்கின்றனர்.

மாற்றம்

இதுபற்றி பேசிய லாரன்,"எல்லாம் நன்றாகத்தான் சென்றது. ஆனால், டிசம்பர் மாதத்தில் ஒருநாள் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது போல உணர்ந்தோம். என்னுடைய மகன் எப்போதும் இரவு தூங்கி காலையில் தான் எழுவான். ஆனால், டிசம்பர் மாத துவக்கத்தில் அவன் இரவு நேரத்தில் நடக்க துவங்கினான். வீட்டின் மேற்கூரையை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருப்பான். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஆகவே, வீட்டில் ஏதோ தவறாக இருப்பதாக சந்தேகித்தேன்" என்கிறார்.

family flee haunted home after suffering unexplained bruises

இதனை தொடர்ந்து பாதிரியார் ஒருவரை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார் லாரன். சிறப்பு பிரார்த்தனைகள் செய்த பிறகும் இந்த விசித்திரங்கள் தொடர்ந்திருக்கிறது. அப்போதுதான் லாரனுக்கு மிகவும் பயங்கரமான அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. அன்றைய இரவு வீட்டில் வெளியே இருந்த தோட்டத்தில் தனது கணவருடன் அமர்ந்திருந்திருக்கிறார் லாரன். அப்போது, வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த அவருடைய மகன் அலறும் சத்தம் கேட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து "என்னை விட்டுப்போ" என சிறுவன் கத்தியதாக சொல்கிறார் லாரன்.

கெட்ட கனவு

இதனிடையே ஒருநாள் இரவு லாரனுக்கு கெட்ட கனவு வந்திருக்கிறது. அதனை தொடர்ந்து வெகுநேரம் விழித்திருந்த அவர், பின்னர் தூங்கியுள்ளார். காலையில் எதேச்சையாக கண்ணாடி பார்க்கையில் அவரது உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்ததிருக்கிறது. இதனால் திடுக்கிட அவர் அமானுஷ்ய ஆய்வாளர்கள் சிலரை சந்தித்து பேசியிருக்கிறார். அவர்களிடம் ஒருநாள் சமையலறையில் இருந்த பிரிட்ஜ் கதவு தானாக திறந்ததாக லாரன் குறிப்பிட்டிருக்கிறார்.

family flee haunted home after suffering unexplained bruises

இதனை தொடர்ந்து, அந்த வீட்டுக்குள் சென்ற ஆராய்ச்சியாளர்கள் வினோதமான செயல்களை செய்திருக்கிறார்கள். லாரனை குளியலறைக்குள் போகச்சொன்ன அவர்கள் அந்த அறையின் விளக்கை ஆஃப் செய்திருக்கிறார்கள். இதுபற்றி பேசிய லாரன்,"நான் குளியலறையில் இருந்தேன். வெளியே அவர்கள் மெல்லிய குரலில் "அன்று பிரிட்ஜின் கதவை திறந்தது நீங்களா?" எனக் கேட்டனர். எந்த பதிலும் வரவில்லை. அதனை தொடர்ந்து "இந்த வீட்டை விட்டு நாங்கள் வெளியேற விரும்புகிறீர்களா? அப்படியென்றால் விளக்கை ஒளிர செய்யுங்கள்" என்றனர். அப்போது விளக்கு ஒளிரத் துவங்கியது" என்றார்

அந்த வாரமே லாரன் தம்பதி அந்த வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். இப்போது அவரது மகன் இரவு நேரங்களில் நடப்பதில்லை என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் அவர். இது உள்ளூர் மக்களை பெரிதும் குழப்பத்திலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.

Also Read | "துபாய்க்குனு சொல்லி ஏமாத்திட்டாங்க".. 20 வருஷமா அம்மாவை காண துடித்த மகள்.. எதேச்சையா யூட்யூபில் பார்த்த வீடியோவால் தெரியவந்த உண்மை..!

Tags : #FAMILY #HAUNTED HOME

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Family flee haunted home after suffering unexplained bruises | World News.