நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: விஜய் மக்கள் இயக்கத்திற்கு இரண்டாவது வெற்றி.. குஷியில் விஜய் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: முதல் வெற்றியை பதிவு செய்தது மக்கள் நீதி மய்யம்..!
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.முறைகேடு புகார் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 7 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடந்தது. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 279 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தபால் ஓட்டுகள்
வாக்கு எண்ணிக்கையின் முதற் கட்டமாக தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. தபால் ஓட்டுகளை பிரித்து யாருக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது என்பது அனைத்து முகவர்களுக்கும் தெரியும் வகையில் காண்பிக்கப்படும். இதன்பின்பு, யாருக்கு அந்த ஓட்டு பதிவாகி உள்ளதோ அவரது கணக்கில் அந்த வாக்கு சேர்க்கப்படும். இதன்பின்பு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டுவரப்படும். பின்னர் கன்ட்ரோல் யூனிட்டில் இருக்கும் 'சீல்' வேட்பாளர்கள் முன்னிலையில் உடைக்கப்படும். இதைத்தொடர்ந்து கன்ட்ரோல் யூனிட்டில் சின்னம் வாரியாக பதிவான வாக்குகள் சேகரிக்கப்படும்.
விஜய் மக்கள் இயக்கம்
நடிகர் விஜய் நேரடியாக அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும் அவரது ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் பேரில் தேர்தலில் போட்டியிட்டனர். இந்நிலையில், நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் களம் கண்டனர்.
முதல் வெற்றி
புதுக்கோட்டை நகராட்சியில் 4-வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பர்வேஸ் 282 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இதனை அடுத்து வாலாஜா பேட்டையில் நகராட்சியில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் பூக்கடை மோகன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை விஜய் மக்கள் இயக்கம் பெற்றிருப்பது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
பேரூராட்சி தேர்தல் முடிவுகள்: திமுகவுக்கு டஃப் கொடுக்கும் அதிமுக.. பரபரக்கும் கள நிலவரம்

மற்ற செய்திகள்
