100 வருசத்துக்கு முன்னாடி மூழ்கிய கப்பலில் ‘தங்கப்புதையல்’.. இதோட மதிப்பு இத்தனை கோடியா..? மிரண்டு போன ஆய்வாளர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பல நூற்றாண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளான கப்பலில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | நாய் குரைத்த சத்தத்தால் ஏற்பட்ட பிரச்சனை.. டாட்டூ கலைஞருக்கு நேர்ந்த சோகம்.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!
கொலம்பியா கரீபியன் துறைமுகத்தில் இருந்து கடந்த 1708-ம் ஆண்டு சான் ஜோஸ் கேலியோன் என்ற கப்பல் புறப்பட்டு சென்றது. எதிர்பாராத விதமாக இந்த கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த கப்பலில் பல கோடி மதிப்பிலான தங்க நாணயங்கள், விலை உயர்ந்த பொருட்கள் கொண்டு செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதை கண்டுபிடிக்க பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து முயற்சி செய்து வந்த நிலையில், தற்போது கொலம்பியா கடற்படை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அருகே மேலும் இரண்டு பெரிய கப்பல்கள் மூழ்கி கிடப்பதாகவும் கூறப்படுகிறது.
கப்பலில் உள்ள பொருட்கள் குறித்து ஆய்வு செய்த கொலம்பியா கடற்படை, அதில் தங்க நாணயங்கள் இருப்பதை புகைப்படம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல நூற்றாண்டுக்கு முன் மூழ்கிப் போன கப்பலில் இருந்து தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன் தற்போதைய மதிப்பு பல நூறு கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கப்பலை மீட்கும் முயற்சியில் கொலம்பியா கடற்படை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
