'பணம் என்ன சார் பணம்'... 'அங்க நிக்குறீங்க சார்'...'ரெண்டு பேரும்' ... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Jun 11, 2019 03:56 PM

உலகின் மெகா பணக்காரர்களான பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் இணைந்து செய்த செயல் ஒன்று பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

Bill Gates And Warren Buffett Serve Ice Creams video goes viral

ஒமாஹாவிலுள்ள டயரி க்யூன் என்ற உணவகத்திற்கு வந்த இருவரும்,அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு தயாரித்து பறிமாறியுள்ளனர்.‘ஒமாஹாவிலுள்ள பெர்க்சையர் ஹாட்டவேயில் மீட்டிங்யில் கலந்து கொள்ள வந்த நாங்கள், மதிய உணவிற்காக டயரி க்யூன் சென்றோம். அங்கு உணவு பரிமாறவும் செய்தோம்' என ட்விட் செய்தார் பில் கேட்ஸ்.அதோடு வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் ஆகிய இருவரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறியுள்ளனர்.இது நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.பெரும் பணக்காரர்கள் இருவரும்,எந்த வித ஈகோவும் இல்லாமல் எளிமையாக நடந்து கொண்டது பலரையும் நெகிழ செய்துள்ளது. இதனிடையே டயரி க்யூன் நிறுவனத்தை,1998ம் ஆண்டு வாரன் பஃபெட் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #BILL GATES #WARREN BUFFETT #ICE CREAMS #DAIRY QUEEN