ஒரே நாளில் 'ஐந்தரை லட்சம் கோடி' அம்பேல்... 'அம்பானி' முதல், 'பில்கேட்ஸ்' வரை... 'உலக பணக்காரர்கள்' தலையில் விழுந்த 'பேரிடி'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Mar 15, 2020 01:03 AM

கொரோனா வைரஸ் பீதியால் உலக அளவில் பங்கு சந்தைகளில் சரிவு ஏற்பட்டதையடுத்து, உலகப் பெரும்பணக்காரர்கள் ஒரே நாளில் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்களை இழந்துள்ளனர்.

Billionaires who lost $ 78 billion in assets in a single day

கொரோனா வைரஸ் பீதியால், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவுக்கு வர அதிபர் டிரம்ப் தடை விதித்தார். இதனால் உலக அளவில் பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சியைக் கண்டன. அமெரிக்க பங்குச் சந்தைகள், 1987-ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரும் இழப்பை சந்தித்தன.

இதன் தொடர்ச்சியாக உலக கோடீஸ்வரர்கள் ஒரே நாளில் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்களை இழந்துள்ளனர். உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்துக்களை இழந்துள்ளார். உலகின் மூன்றாவது பணக்காரரான பெர்னாடு அர்னால்டின் LVMH நிறுவன பங்குகள் 9 சதவிகிதம் குறைந்ததால் அவர் 7.7 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்புகளை சந்தித்துள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், 6.98 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். இதேபோல், ஆரக்கிள் நிறுவனர் லாரி எலிசன், ​கூகுள் நிறுவனர்கள் லாரி பெய்ஜ், சர்ஜ பிரின், டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் ஆகியோரும் கணிசமான அளவில் தங்களது சொத்து மதிப்பை இழந்துள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஆசிய அளவில் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றிருந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 42 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சரிந்துள்ளது. இதனால் அவர் ஆசிய அளவில் இரண்டாமிடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

Tags : #BILLIONAIRES #78 BILLION #DOLLERS #CORONA IMPACT #BILL GATES #AMBANI