திடீரென அதிகரித்த எண்ணிக்கையால் 'கலங்கித்தவித்த' மக்கள்... 40 நாட்களுக்கு பின் 'மீண்டு' வந்த தமிழக மாவட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. அதே நேரம் தென் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது.
குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி முதல் கொரோனா தொற்று எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் இருந்தது. இதையடுத்து அங்கு மாவட்டம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது. இதையடுத்து, கொரோனா தற்போது அங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
ஜூன் மாதம் 24-ம் தேதி முதல் இரட்டை இலக்கத்தில் இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை சுமார் 40 நாட்களுக்கு பின் உச்சம் குறைந்துள்ளது. இதுவரை 4,348 நடமாடும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், அதில் 2,39,000 பேர் பரிசோதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7% இருந்து 3% குறைந்துள்ளது.