"என்னது, எல்லா குழந்தைக்கும் இப்டி தான் பேரு வெச்சு இருக்காங்களா??.." வியப்பை ஏற்படுத்திய தம்பதி..
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக, ஒரு தம்பதியருக்கு தங்களின் குழந்தை பிறக்கும் நாள் நெருங்கும் போது, என்ன பெயரை வைக்கலாம் என்பது பற்றி தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள்.
மேலும், நாள் வரும் போது சில பெயர்களை தேர்வு செய்து, அதிலிருந்து ஒரு பெயரை வைப்பார்கள்.
இதற்காக, பல வித்தியாசமான பெயர்களை அவர்கள் தேர்ந்தெடுக்கவும் செய்வார்கள். அந்த வகையில், பெல்ஜியம் பகுதியை சேர்ந்த தம்பதி, தங்களின் குழந்தைகளுக்கு வைத்துள்ள பெயர்கள் தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
Gwenny Blanckaert மற்றும் Marino Vaneeno என்ற தம்பதிக்கு இதுவரை மொத்தம் 12 குழந்தைகள் பிறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. முன்னதாக, கடந்த ஆண்டு 11 குழந்தைகள் பிறந்திருக்கும் போதே Gwenny மற்றும் Marino தொடர்பான செய்திகள் அதிகம் இணையத்தில் வைரலாகி இருந்தது. தங்களின் 12 ஆவது குழந்தை இந்த ஆண்டு பிறக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
அப்படி இருக்கையில், A, E, L, X என்ற நான்கு எழுத்துக்களைக் கொண்டு தான், தங்களின் அனைத்து குழந்தைகளுக்கும் பெயர் வைத்துள்ளனர். தங்களின் முதலாவது குழந்தைக்கு Marino-வின் தந்தை ஞாபகமாக Alex என்ற பெயரை வைத்துள்ளனர். தொடர்ந்து, இரண்டாவது குழந்தைக்கு Axel என்ற பெயரை வைத்துள்ளனர். அப்போது தான், இரண்டு குழந்தைகளின் பெயரும் நான்கு எழுத்தைக் கொண்டு இருப்பதை Gwenny மற்றும் Marino உணர்ந்த நிலையில், அனைத்து குழந்தைகளுக்கும் அப்படி பெயரை வைக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து, பிறந்த குழந்தைகளுக்கு Xela, Lexa, Xael, Xeal, Exla, Leax, Xale, Elax, மற்றும் Alxe என அடுத்து 9 குழந்தைகளுக்கும் பெயர் வைத்துள்ளனர்.
இதுவரை, இந்த தம்பதி 12 குழந்தைகளை பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், ஆரம்பத்திலேயே 12 குழந்தைகளை பெற்றுக் கொள்ள அவர்கள் முடிவு செய்திருந்ததாகவும், இதற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லை என்றும் அவர்கள்.குறிப்பிட்டுள்ளனர்.
உலகில் உள்ள பல பெற்றோர்கள், தங்கள் குழந்தை பிறக்கும் சமயத்தில் விதவிதமான பெயர்களை வைக்க வேண்டும் என்று நினைக்கும் நிலையில், வெறும் நான்கே எழுத்துக்களைக் கொண்டு, 12 குழந்தைகளுக்கு பெயர் வைத்துள்ளது தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.