“உணவுல விஷம் கலக்குறது.. அவங்களுக்கு ஒன்னும் புதுசு இல்ல!... ஆனா, இது கொஞ்சம் பயங்கரமா தான் இருக்கு...” - ‘எதிர்க்கட்சி தலைவருக்கு நேர்ந்த கதி!’.. ரஷ்ய அதிபரை சாடும் ஜெர்மனி!!
முகப்பு > செய்திகள் > உலகம்கோமா நிலையில் இருந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny ஜெர்மனிக்கு சிகிச்சைக்காக அவசர அவசரமாக கொண்டு வரப்பட்ட நிலையில் அவரது நிலை குறித்து ஜெர்மனி அரசு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கடுமையாக விமர்சித்து வந்த ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரான Alexei Navalny ஆம்புலன்ஸ் மூலம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் வந்திறங்கிய சம்பவம் உலகையே திரும்பிப் பார்க்கவைத்தது. புதினுக்கு எதிராக அதிபர் தேர்தலில் நிற்க முயன்ற இவருக்கு முன்னதாக தடை விதிக்கப்பட்டது.
இதனால் Alexei Navalny இன்னும் புதினை கடுமையாக விமர்சித்து வந்த சூழ்நிலையில்தான் விமானத்தில் பயணிக்கும் போது திடீரென அவர் நோய்வாய்ப்பட்டு கோமா நிலைக்கு சென்றார. அது தவிர Alexei Navalny-ன் ஆதரவாளர்கள் அவருக்கு தேநீரில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதாகவும் அதன் பின்னணியில் ரஷ்ய அதிபர் புதினின் அலுவலகம் இருப்பதாகவும் கருதுவதாக தகவல்கள் வெளியாகின.
அது மட்டுமல்லாமல் அவரை ஜெர்மனிக்கு கொண்டுசென்று சிகிச்சை அளிப்பதற்காக அனுப்பும்படி மருத்துவர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவரால் விமானத்தில் பயணிக்க முடியாது என்று ரஷ்ய மருத்துவமனை அவரை ஜெர்மனிக்கு அனுப்ப மறுத்தது. இந்த சூழ்நிலையில்தான் ரஷ்யாவின் மீது சந்தேகம் இன்னும் வலுத்தது. இந்த நிலையில் ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தாங்கள் அவருக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்ததை அடுத்து Alexei Navalny ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதனிடையே Alexei Navalny விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்கிற தகவலை ரஷ்ய மருத்துவர்கள் அவசரஅவசரமாக மறுத்ததுடன் அவருக்கு வேறு ஏதோ பிரச்சினை முன்பே இருந்ததாகவும் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் அவர் மயக்கமடைந்திருக்கலாம் என்றும் தொடர்ந்து கூறிவந்தனர்.
இந்த நிலையில் ஜெர்மன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Alexei Navalny-ன் நிலைமை கவலைக்கிடமாக இருந்தாலும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பேசிய ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலின் செய்தித்தொடர்பாளர், Alexei Navalnykக்கு யாரோ விஷம் வைத்துள்ளார்கள் என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இப்படி ‘தேநீரில் விஷம் கலந்திருக்கலாம்’ எனும் குற்றச்சாட்டுக்கு ரஷ்ய வரலாற்றில் ஏகப்பட்ட உதாரணங்கள் இருப்பதாகவும் உலகம் இந்த விஷயத்தை சீரியசாக எடுத்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல் மருத்துவமனையைச் சுற்றி கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது பற்றி கேட்ட போது, Alexei Navalnyக்கு விஷம் வைக்கப்பட்டுள்ளதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிய வருவதால், அவருக்கு பாதுகாப்பும் அவசியமாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.