“மொத்த சென்னையிலயும் இந்த 2 ஏரியாலதான்.. அதிக கட்டுப்பாட்டு மண்டலங்கள் இருக்கு!!!”.. மாநகராட்சி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியாவில் கொரோனாவுக்கு மொத்தமாக பாதித்தவர்களின் எண்ணிக்கை 31.06 லட்சமாக உயர்ந்துள்ளது.
பலி எண்ணிக்கை 57,542ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை, 3.79 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 6,517 பேர் பலியாகியுமுள்ளனர். சென்னையில் மட்டும் 1,25,389 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பலி எண்ணிக்கை 2581 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை கார்ப்பரேஷனின் சமீபத்திய தரவுகளின்படி, அண்ணா நகர் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்கள்தான் சென்னை நகரத்திலேயே அதிக எண்ணிக்கையிலான கட்டுப்பாட்டு மண்டலங்களைக் கொண்டுள்ளன என்றும், இம்மண்டலங்கள் முறையே தலா 9 மற்றும் 7 கட்டுப்பாட்டு மண்டலங்களைக் கொண்டுள்ளன.
ஆகஸ்ட் 14 ஆம் தேதி கிடைத்த தரவுகளின்படி, அண்ணா நகருக்கு மூன்று கட்டுப்பாட்டு மண்டலங்களும், வளசரவாக்கத்தில் ஒன்றும் இருந்தன. ஓரிடத்தில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டால் ஒரு தெரு ஒரு கட்டுப்பாட்டு மண்டலமாக மாறும்.அதன்படி அண்ணா நகரில், தற்போது 10% கொரோனா பாதிப்பும், வளசரவாக்கம், அம்பத்தூர் மற்றும் அடையார் மண்டலங்களுடன், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அதிகபட்சமாக ஒவ்வொரு மண்டலத்திலும் மொத்தமாக 15% கொரோனா பாதிப்புகள் தற்போது இருக்கின்றன.
இதற்கிடையில், மாதவரம், பெருங்குடி மற்றும் ஷோலிங்கநல்லூர் மண்டலங்களில் இன்னும் 14% கொரோனா பாதிப்புகள் உள்ளதாகவும், திருவெற்றியூரில் 6%, மணலியில் 7%, தண்டையார்பேட்டையில் 7%, ராயபுரத்தில் 6%, திரு.வி.க நகரில் 9%, தேனாம்பேட்டில் 7% கொரோனா பாதிப்புகள் சிகிச்சையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. முன்னதாக சென்னை நகரின் அனைத்து 15 மண்டலங்களிலும் ஒட்டுமொத்தமாக செயலில் உள்ள கொரோனா பாதிப்புகள் 10% ஆக உள்ளன, ஏற்கனவே 87% பாதிப்புகள் குணமாக்கப்பட்டுள்ளன.