'கூடிய சீக்கிரம் களத்துல... தெறிக்க விட்றோம்'!.. அடுத்த அதிரடிக்கு தயாராகும் இந்தியா!.. வெளியான பரபரப்பு தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபூனேவின் சீரம் நிறுவனம் (SII) தயாரித்து வரும் கொரோனா தடுப்பு மருந்து, 2ம் கட்ட மனித பரிசோதனைக்கு வெற்றிகரமாக முன்னேறியுள்ளது.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் தலைமையில், சீரம் நிறுவனம் உருவாக்கியுள்ள COVISHIELD தடுப்பு மருந்தைத் தான், உலக சுகாதார நிறுவனம் முன்னிலைப்படுத்தி வருகிறது. மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் இந்த மருந்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
இந்நிலையில், ஐசிஎம்ஆர்-இன் வழிகாட்டுதலின்படி, COVISHIELD தடுப்பு மருந்தின் 2ம் கட்ட மனித பரிசோதனைகளை மேற்கொள்ள இந்தியா முழுவதும் பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், 350 தன்னார்வலர்கள் பரிசோதனைக்கு பதிவு செய்துள்ளனர்.
பூனேவில் 4 இடங்கள், மும்பையில் 2 இடங்கள், கொரக்பூர் மற்றும் இன்னபிற பகுதிகளில் இந்த வாரம் பரிசோதனைகள் தொடங்கவுள்ளன.
இதுவரை மிகச்சிறந்த பரிசோதனை முடிவுகளை அளித்துள்ள COVISHIELD தடுப்பு மருந்துக்கு, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.