'காரை கொஞ்சம் நிறுத்துங்க மேடம்'... 'சார் பார்த்தா தெரியல, நான் கர்ப்பிணி'... 'ஒரு நிமிடம் ஆடிப்போன போலீசார்'... பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்சந்தேகத்தின் பேரில் பெண்ணின் காரை நிறுத்திய போலீசாருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

பிரேசில் நாட்டில் போலீசார் வழக்கம் போலச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது போதைப் பொருள் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. சம்பந்தப்பட்ட சாலை வழியாகத் தான் கடத்தல் போதைப் பொருள் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் யார் அதைக் கடத்தி வருகிறார்கள், என்ன வாகனத்தில் வருகிறார்கள் என்பது குறித்த எந்த தகவலும் காவல்துறையிடம் இல்லை.
இதையடுத்து சந்தேகத்திற்கு உரிய வகையில் இருக்கும் நபர்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்து அனுப்பினார்கள். அப்போது பெண் ஒருவர் காரை ஓட்டிக் கொண்டு வந்தார். அவரை நிறுத்திய போலீசார், அவரின் காரை சோதனை செய்ய முயற்சி செய்தார்கள். ஆனால் அந்த பெண் தான் கர்ப்பிணி எனக் கூறியுள்ளார். போலீசார் அந்த பெண்ணை பார்த்தபோது அவரும் கர்ப்பிணிப் பெண் இருப்பதைப் போல, பெரிய வயிற்றுடன் இருந்துள்ளார்.
ஆனால் போலீசாருக்கு அவரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை சோதனை செய்து விடலாம் என போலீசார் முடிவு செய்து அவரிடம் சோதனை மேற்கொண்டார்கள். அப்போது தான் அவர்களுக்கு எல்லாம் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கர்ப்பிணி எனச் சொல்லிக் கொண்ட அந்த பெண், தனது உடைக்குள் பெரிய தர்பூசணி பழத்தை மறைத்து வைத்திருந்தார்.
இதையடுத்து அந்த தர்பூசணி பழத்தைத் திறந்து பார்த்தபோது, அதில் 4 பவுண்டுகளுக்கும் அதிகமான எடை கொண்ட 4 கொக்கைன் கட்டிகள் இருந்துள்ளன. இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த போதைப் பொருட்கள் அனைத்தும் பராகுவே நாட்டிலிருந்து பெறப்பட்டு, பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரத்திற்குக் கொண்டு செல்ல அந்த பெண் ஒப்புக்கொண்டு அதற்காக 100 டாலர்கள் சம்பளமாகப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு குறித்து இன்னும் சரியாகத் தெரியவில்லை எனக் கூறியுள்ளார் போலீசார், அந்த பெண்ணோடு தொடர்புடைய கும்பலைத் தேடி வருகிறார்கள். 100 டாலர்களுக்கு ஆசைப்பட்டு அந்த பெண் சிறைக்குச் செல்ல இருக்கும் நிலையில், தான் கர்ப்பிணி என்றால் சாமர்த்தியமாகப் போதைப் பொருட்களை எடுத்துச் சென்று விடலாம் என நினைத்த அந்த பெண்ணின் கனவை போலீசார் சுக்கு நூறாக நொறுக்கி விட்டார்கள்.

மற்ற செய்திகள்
