இந்த மாதிரி 'வேலை'லாம் எங்ககிட்ட வச்சுக்காதீங்க...! 'அப்புறம் வேற மாதிரி ஆயிடும்...' - கடும் எச்சரிக்கை விடுத்த 'சீன' அதிபர்...!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவை அடிமைப்படுத்த நினைத்தால் நாடே ரத்தக்களறியாக மாறும் என அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவில் தற்போதைய செயல்பாடுகள் உலகளவில் பல அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது என்று தான் சொல்லவேண்டும். இந்நிலையில் சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட நிலையில் சீன அதிபர் பேசிய வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.
கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா தியானன்மென் கேட் சதுக்கத்தில் நடந்த நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும், அந்நாட்டு அதிபருமான ஜி ஜின்பிங் துவக்கி வைத்தார். அந்த விழாவில் அதிபர் ஜி ஜின்பிங், மாவோ ஷியோடோங் போல் உடையணிந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அவர் ஆற்றிய உரையில் கூறியதாவது, 'சீனாவும், சீனமக்களும் தன்னம்பிக்கை காரணமாக வலிமையானவர்களாக இருக்கிறார்கள். இனி சீனாவை அடிமைப்படுத்தலாம் என்ற எண்ணம் யாருக்கும் வரக்கூடாது.
சீனாவை அடிமைபடுத்தும் காலம் நிறைவு பெற்று விட்டது. சீனா எந்த நாட்டையும் நாம் அடிமைபடுத்தியது கிடையாது; அடக்கியதும் இல்லை; அடக்குமுறைகளை ஏவியதும் இல்லை. கடந்த காலங்களிலும் இதனை தான் செய்தாம், எதிர்காலத்திலும் இதுவே தொடரும்.
இதையே தான் மற்ற நாடுகளிடமிருந்து எதிர்பார்க்கிறோம். எந்த வெளிநாட்டு சக்திகளும், சீனாவை அடக்கவோ, அடக்குமுறைகளை ஏவவோ அடிமைபடுத்தவோ அனுமதிக்க முடியாது. அவ்வாறு செய்ய முயல்பவர்கள், 140 கோடி மக்கள்கொண்ட இரும்பு சுவர் முன்னர் ரத்தக்களறியை சந்திப்பார்கள்.
ஹாங்காங் மீதான உரிமையை சீனா நிலைநாட்டி உள்ளது. தைவானும், சீனாவின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது' எனக் கூறியுள்ளார்.