VIDEO: ‘இப்படியொரு பதிலை கொஞ்சமும் எதிர்பார்க்கல’.. பிரஸ் மீட்டில் ‘கடுப்பேற்றிய’ நிருபர்.. சிம்பிளா ‘ரெண்டே’ வார்த்தையில் பதிலளித்த கோலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 30, 2021 02:37 PM

செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன் விராட் கோலி பேசிய விதம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

Kohli shows self control while answering in press conference

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த புதன் கிழமை லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. நான்கு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் ஒரு வீரர் கூட 20 ரன்களை தாண்டவில்லை. இது இந்திய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Kohli shows self control while answering in press conference

இந்தியா பேட்டிங்கில் சொதப்பினாலும், பவுலிங்கில் சரி செய்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்ததே வேறு, இந்திய பவுலர்களின் பந்துவீச்சை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நாலாபுறமும் சிதறடித்தனர். அதனால் இங்கிலாந்து அணி 432 ரன்களை குவித்தது. இதில் அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் சதம் (121 ரன்கள்) அடித்து அசத்தினார்.

Kohli shows self control while answering in press conference

இந்த இமாலய இலக்கை நோக்கி இந்தியா தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. ஆனால் 278 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய அணி பறிகொடுத்தது. இதனால் 76 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. அதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்து வருகின்றன.

Kohli shows self control while answering in press conference

இந்த நிலையில் இந்திய அணியின் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தோல்வி குறித்து பேசிய அவர், ‘நாங்கள் முதல் இன்னிங்ஸில் மிக குறைவான ரன்களைதான் எடுத்தோம். ஆனால் இங்கிலாந்து அணி அதிக ரன்களை குவித்துவிட்டனர். அதனால் மிக மோசமான தோல்வியை பெற்றுவிடக்கூடாது என நினைத்து விளையாடினோம். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் மிடில் ஆர்டரில் சொதப்பியதால் தோல்வியை தழுவினோம்’ என கோலி கூறினார்.

Kohli shows self control while answering in press conference

அப்போது நிருபர் ஒருவர், ‘இங்கிலாந்து பவுலர்கள் பெரும்பாலும் பந்தை பேட்டுக்குதான் வீசினர். இது ரன் எடுப்பதற்கு சாதகமான ஒன்று. இதை இந்திய பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடியிருக்கலாம். ஆனால் இந்த வாய்ப்புகளை அவர்களை கோட்டைவிட்டு விட்டனர்’ என விமர்சனம் செய்தார். ஆனால் இதற்கு கோலி, ‘சரி, நன்றி’ என அமைதியாக பதிலளித்தார்.

பொதுவாக விராட் கோலி, மைதானத்தில் ஆக்ரோஷமாக காணப்படுவார். அதனால் அவர் கோபமான நபர் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த சூழலில் இந்திய அணியின் தோல்வி குறித்த நிருபரின் விமர்சனத்துக்கு கோலி அமைதியாக பதிலளித்தது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kohli shows self control while answering in press conference | Sports News.