மொத்தமா 3,800 டன் எடை கட்டிடம்.. "அப்படியே அலேக்கா தூக்கி மாத்தி வச்சுடலாமா??.." கோதாவில் இறங்கிய பொறியாளர்கள்.. சீனாவில் அதிசயம்

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Jul 12, 2022 06:51 PM

சீனாவின் ஷாங்காய் நகரத்தில் சுமார் நூறாண்டு பழமை வாய்ந்த கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள், பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

china shanghai century old 3800 tonne building move from location

Also Read | "எது, ஒரு பிளேட் French Fries விலை 15,000 ரூபாயா??.." மூக்கு மேல விரல் வெச்ச மக்கள்.. "கின்னஸ் சாதனை வேற பண்ணி இருக்காமே.."

ஒரு கட்டிடத்தை இருந்த இட்த்தில் இருந்து, வேறு இடத்திற்கு மாற்றிச் செல்வது என்பது சற்று கடினமான காரியம் தான். புதிய வகை தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, ஒரு கட்டிடம் அல்லது வீட்டினை ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு மாற்றி வருகின்றனர்.

அந்த வகையில், சீனாவின் ஷாங்காய் நகரத்தில், 100 ஆண்டு பழமை வாய்ந்த கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இதன் எடை என்பது, சுமார் 3,800 டன் ஆகும்.

கட்டிடத்தை நகர்த்தும் பணி

இத்தகைய எடையுள்ள கட்டிடத்தை நகர்த்துவது என்பது எளிதில் நடைபெறும் காரியம் அல்ல. அனைத்து விஷயங்களும் சிறப்பாக திட்டமிட்டு, அதனை அப்படியே செயல்படுத்த வேண்டும். அதே போல, கற்பனைக்கு அப்பாற்பட்ட பொறியாளர்களும் இதற்கு தேவைப்படுவார்கள். இப்படி அனைத்து விஷயங்களும் சிறப்பாக அமையவே, பழமையான கட்டிடத்தை நகர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

china shanghai century old 3800 tonne building move from location

அசத்திய பொறியாளர்கள்

இதற்காக, ஸ்லைடிங் ரயில்ஸ் என்ற தண்டவாளம் ஒன்றை அமைத்து, பின்னர் நகர்த்தி கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும், நடை பயிற்சி இயந்திரம் என அழைக்கப்படும் புதிய தொழில்நுட்பம் ஒன்றின் உதவியுடன் எந்தவித பிரச்சனையும் இன்றி, கட்டிடத்தை இடம் மாற்றியுள்ளனர். அது பார்ப்பதற்கு ரோபோ ஒன்று காலடி எடுத்து வைத்து நகர்வது போலவே இருக்கிறது.

சுமார் 3800 டன் எடை கொண்ட இந்த பழமையான கட்டிடத்தை எந்தவித பாதிப்பும் இன்றி இப்படி நகர்த்திக் காட்டிய பொறியாளர்களுக்கு அந்நகர மேயர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதே போல, அப்பகுதி மக்களும் இந்த செயலுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். இப்படி பெரிய கட்டிடத்தை மாற்றும் தொழில்நுட்பம் என்பது புதிது ஒன்றும் அல்ல.

முன்னதாக, கடந்த 2020 ஆம் ஆண்டு, ஷாங்காய் பகுதியில் அமைந்துள்ள சுமார் 7,600 டன் எடை கொண்ட பள்ளிக்கு கட்டிடம் ஒன்றை வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்தனர். இதற்காக சுமார் 18 நாட்கள் வரை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அதே போல, அமெரிக்காவில் உள்ள சில பிரபல கட்டிடங்களையும் இப்படி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, எந்தவித பாதிப்பும் இல்லாமல் இடம் பெயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | "நித்யானந்தா மாதிரி இருக்கா?.." 18 அடி சிலைக்கு கும்பாபிஷேகம்??... கடும் குழப்பத்தில் பக்தர்கள்

Tags : #CHINA #CHINA SHANGHAI #BUILDING MOVE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. China shanghai century old 3800 tonne building move from location | World News.