"எல்லாம் WASTE-அ போச்சே.." MATHS'ல பையன் வாங்கிய மார்க்.. தேம்பி தேம்பி அழுத தந்தை.. வைரல் வீடியோ பின்னால் உள்ள காரணம்
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தேம்பி தேம்பி அழுவதும், அதன் பின்னால் உள்ள காரணமும், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன், சீனாவின் ஸெங்ஸூ என்னும் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மகன், பள்ளித் தேர்வில் கணக்கு பாடத்தில், 100-க்கு 6 மதிப்பெண்கள் வாங்கி உள்ளார். இதனால், அவரது தந்தை கண்ணீர் விட்டு கதறிக் கொண்டே இருக்கிறார்.
இறுதித் தேர்வில் ஒற்றை இலக்க மதிப்பெண்ணை பெற்ற மகனை கண்டிக்காமல், ஏன் இப்படி அழுது கொண்டே இருக்கிறார் என்பது தான் பலரது மத்தியில் கேள்வியாக எழுந்திருந்தது.
தேம்பி தேம்பி அழுத தந்தை
இதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம். கணக்கு பாடத்தில் முழு மதிப்பெண்கள் எடுக்காமல், சராசரி மதிப்பெண்கள் எடுத்து வந்துள்ளார் வீடியோவில் அழுது கொண்டே இருக்கும் நபரின் மகன். இதனால், பள்ளி நேரம் முடிந்து வீட்டிற்கு வந்த பின்னரும், கணக்கு பாடத்திற்கு மட்டும் அந்த நபரே மகனுக்கு முழு நேரமும் வகுப்பு எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த பல மாதங்களாக இரவு பகல் பாராமல், அதிகம் கண்டிப்புடன் நிறைய நேரம் செலவழித்து, மகனுக்கு கணிதம் கற்பித்துக் கொடுத்துள்ளார் அந்த தந்தை.
100-க்கு 6 மதிப்பெண்கள்
ஆனால், தேர்வு முடிவில் அந்த சிறுவன், நூறுக்கு 6 மதிப்பெண்கள் தான் வாங்கியுள்ளார். இது தான், அவரின் தந்தையை தேம்பி தேம்பி அழ வைத்துள்ளது. இது தொடர்பாக வெளியான வீடியோவில், அந்த நபர் அழுது கொண்டே இருக்கும் போது, அவரது மனைவி பின்னால் இருந்த படி சிரித்து கொண்டே இருக்கிறார். மேலும் அந்த நபர், "இனி நான் எதை பற்றியும் கவலைப்பட மாட்டேன். என்னுடைய அனைத்து முயற்சிகளும் வீணாகி விட்டது. இனி அவன் தானாகவே போராடி பார்த்துக் கொள்ளட்டும்" என அழுது கொண்டே கூறுகிறார்.
அதே போல, தந்தை கணித வகுப்பு எடுப்பதற்கு முன்பாக, அந்த சிறுவன் 40 முதல் 50 மதிப்பெண்கள் வரை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு பக்கம் இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வேடிக்கையாக பார்க்கப்பட்டாலும், மேலும் சிலர் அந்த தந்தையின் அழுத்தம் காரணமாக கூட அந்த சிறுவன் இருந்ததை விட பின்னால் போய், ஒற்றை இலக்க மதிப்பெண்கள் எடுத்திருக்கலாம் என்றும், பிள்ளைகளை அவர்களின் வழியில் விட்டு, மெல்ல மெல்ல பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
Also Read | காபி ஆர்டர் எடுக்கும் ட்விட்டர் சிஇஓ.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. பின்னணி என்ன??