"புதுசா வீடு வாங்கி, வேல பாத்தப்போ.." தரைக்கு அடியில் கிடந்த பொருள்.. "ஒரு நிமிஷம் அந்த தம்பதிக்கு அள்ளு விட்டுருச்சு"
முகப்பு > செய்திகள் > உலகம்கனடாவைச் சேர்ந்த தம்பதி ஒன்று, தாங்கள் புதிதாக வாங்கிய வீட்டின் தரையின் கீழ் கண்டுபிடித்து உள்ள பொருள் ஒன்று, கடும் அதிர்ச்சியை அவர்களுக்கு மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
Also Read | "அது மட்டும் இல்லன்னா என்ன ஆகி இருக்கும்??.." பேருந்தில் இப்படி சிக்கிய நபர்.. பதைபதைப்பு சம்பவம்
கனடாவின் Ontario என்னும் பகுதியைச் சேர்ந்தவர்கள் Cassidy Casale மற்றும் Eton Marritt. இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன், வீடு ஒன்றை புதிதாக வாங்கி உள்ளனர்.
தொடர்ந்து, அந்த வீட்டினை புதுப்பிக்கும் பணியிலும் அவர்கள் இருவரும் ஈடுபட்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி அவர்கள் தரையை பெயர்த்து பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் தான், அதன் அடியில் சில பெரிய எலும்புகள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டதுமே அவர்கள் இருவரும் கையில் இருந்த கருவிகள் அனைத்தும் கீழே போட்டு விட்டு, உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவித்துள்ளனர். மேலும் வெளியான தகவல்களின் படி, பெரிய எலும்புகள் தவிர சில விசித்திரமான பொருட்களையும் அவர்கள் தரையில் இருந்து கண்டுபிடித்ததாக கூறி உள்ளனர். எலும்புகளுடன் 1960களில் உள்ள சில செய்தித்தாள்களும், புகைப்படங்களும் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இது தொடர்பாக பேசும் Cassidy, "எங்கள் வீட்டில் அடித்தளம் எதுவும் கிடையாது. ஒருவர் ஊர்ந்து செல்லக் கூடிய அளவில், தரைக்கு அடியில் ஒரு இடம் மட்டுமே உள்ளது. அங்கும் வீட்டிற்குள் இருந்து தான் செல்ல முடியும். வெளியே இருந்து வர முடியாது. அப்படி இருக்கும் போது, தரைக்கு அடியில் எப்படி இந்த எலும்பு வந்தது என்று எங்களுக்கு புரியவில்லை. ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த எலும்புகளை அவை இருந்த இடத்திலேயே வைத்து விட்டோம்" என தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரியல் பூங்காவில் இருந்து தொல்லியல் ஆராய்ச்சியாளர் ஒருவர், அன்னம் ஒன்றின் எலும்பாக அவை இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, இந்த வீடு கட்டப்பட்ட சமயத்தில், அதற்கு அடியில் அன்னம் இருந்தது தெரியாமல், அதற்கு மேல் வீட்டை உரிமையாளர் கட்டி இருக்கலாம் என்றும் அப்போது இறந்ததன் காரணமாக, எலும்பு துண்டு தற்போது கிடைத்திருக்கலாம் என்றும் அந்த தம்பதியினர் கருதுகின்றனர். ஆனால், இப்படி தான் எலும்புகள் அங்கே வந்திருக்கும் என்ற உண்மையான காரணம், அவர்களுக்கு சரிவர தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.