நள்ளிரவு வீட்டுக்குள் கேட்ட சத்தம்.. தூங்கிக்கொண்டிருந்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்.. கோவை அருகே சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது காங்கிரீட் மேல்பூச்சு பெயர்ந்து விழுந்து இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராமநாதபுரம் பாரதி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் வினோத் கண்ணன் (வயது 35). இவரது மனைவி சாரு (வயது 26). இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளாக குடும்பத்தினருடன் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். வினோத் கண்ணன், வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கான PVC கதவுகளை தயாரிக்கும் பணியை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், வினோத் கண்ணன் வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்குள் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். நள்ளிரவு திடீரென அவர் மீது வீட்டின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் படுகாமடைந்த வினோத் கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டுக்குள் பயங்கர சத்தம் வந்ததைக் கேட்டு குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது கான்கிரீட் மேற்கூரை வினோத் கண்ணன் மீது விழுந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்து தூங்கிக் கொண்டிருந்தபோது இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பதிகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
