விற்பனைக்கு வந்த நிஜ CONJURING வீடு.. 286 வருஷமா தொடரும் மர்மம்.. கிட்ட நெருங்கவே பயப்படும் மக்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | May 27, 2022 02:25 PM

அமெரிக்காவின் மிக பிரபலமான பேய் வீடு என்று அழைக்கப்படும் பழைய பண்ணை வீடு ஒன்று 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகியுள்ளது.

House In USA That Inspired The Conjuring Sold For 1.5 Million USD

Conjuring வீடு

2013 ஆம் ஆண்டு வெளியாகி உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்ட படம் தான் 'The Conjuring'. இந்தப் படத்தில், குடும்பம் ஒன்று புது வீட்டுக்கு குடிபுகும். அந்த வீட்டில் நடைபெறும் அமானுஷ்ய சம்பவங்களினால் சிக்கித்தவிக்கும் அக்குடும்பம் அதிலிருந்து மீண்டார்களா? இல்லையா? என்ற ரீதியில் கதை பயணிக்கும். அமெரிக்காவின் ரோட் தீவில் (Rhode Island) அமைந்துள்ள பண்ணை வீடு ஒன்றில் நடந்ததாக சொல்லப்படும் சம்பவங்களை தழுவியே The Conjuring படம் எடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வீடு தற்போது 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரால் வாங்கப்பட்டிருக்கிறது.

House In USA That Inspired The Conjuring Sold For 1.5 Million USD

மர்ம வீடு

286 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட இந்த பண்ணை வீட்டில் 3 படுக்கையறைகள் இருக்கின்றன. மொத்தம் 3,100 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீட்டில் 1971 மற்றும் 1980 க்கு இடையில் ஆண்ட்ரியா பெரோன் என்பவர் வசித்து வந்தார். அந்த வீடு பல அதிர்ச்சியளிக்கும் அனுபவங்களை தங்களது குடும்பத்திற்கு அளித்துள்ளதாக குறிப்பிடும் பெரோன்," ஒருமுறை வயதான எனது தாய், நாற்காலியில் இருந்து 20 அடி தூரம் தூக்கியெறியப்பட்டதை பார்த்தேன். வயது மூப்பின் காரணமாக அவருக்கு அந்த சம்பவம் குறித்து ஞாபகம் இல்லை. இந்த விஷயத்தை அறிந்த அமானுஷ்ய ஆர்வலர் ஒருவர் இந்த வீட்டிற்கு வந்தார். அப்போது அவரையும் கண்ணுக்குத் தெரியாத ஒன்று தாக்கியது" என்கிறார்.

House In USA That Inspired The Conjuring Sold For 1.5 Million USD

அதன்பிறகு அமானுஷ்ய புலனாய்வாளர்களான ஜென் மற்றும் கோரி ஹெய்ன்சன் ஆகியோர் இந்த வீட்டை 2019 இல் 4,39,000 டாலர்களுக்கு வாங்கினர். அதைத் தொடர்ந்து 2021 செப்டம்பரில் இந்த வீட்டை விற்க இருப்பதாக அறிவித்தனர் ஜென் மற்றும் கோரி. இந்நிலையில் இந்த வீட்டை வாங்கியுள்ளார் ரியல் எஸ்ட்டேட் அதிபரான ஜாக்குலின் நுனேஸ்.

நிபந்தனை

இந்த வீட்டை வாங்குபவர்களுக்கு வித்தியாசமான நிபந்தனை ஒன்றையும் விதித்திருக்கிறார்கள் ஜென் மற்றும் கோரி ஹெய்ன்சன். அதாவது, இந்த வீட்டை வாங்குபவர்கள் பாதுகாப்பு காரணம் கருதி இவ்வீட்டில் வசிக்கக்கூடாது எனத் தெரிவித்திருக்கிறார்கள் இருவரும். மாறாக வணிக நடவடிக்கைகளை தொடரலாம் எனவும் அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் எனவும் இந்த தம்பதி தெரிவித்திருக்கிறது. இதற்கு சம்மதித்த பிறகே ஜாக்குலின் நுனேஸ் இந்த வீட்டை வாங்கியுள்ளார்.

House In USA That Inspired The Conjuring Sold For 1.5 Million USD

இதுகுறித்து பெரோன் பேசுகையில்,"அந்த வீடு எங்களது குடும்பத்தை தேர்ந்தெடுத்ததை போலவே, தற்போது ஜாக்குலின் நுனேஸையும் தேர்ந்தெடுத்திருக்கிறது" என்றார்.

Tags : #CONJURING #HOUSE #USA #பேய்வீடு #அமெரிக்கா #விற்பனை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. House In USA That Inspired The Conjuring Sold For 1.5 Million USD | World News.