'யோவ், அவ்வளவு பாசமாயா மனைவி மேல'... 'ச்சே இப்படி ஒரு கணவன் கூட வாழ முடியாமல் போச்சே'...'மனைவியின் நினைவு நாளில் இவர் என்ன செஞ்சிருக்காரு பாருங்க!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Aug 27, 2021 08:24 PM

நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த கர்ப்பிணிப்பெண் மீது குடிபோதையில் வந்த பெண் மோதி விபத்தை ஏற்படுத்தினார்.

Man-Daughter Recreate Maternity Pictures With His Late Wife

அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த விபத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. நிச்சயம் பலரது இதயங்களை அந்த விபத்து நொறுக்கியிருக்கும். கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த தம்பதி தான் James Alvarez மற்றும் Yesenia. இவர்களுக்குத் திருணம் ஆகி தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக நகர்த்திக் கொண்டு இருந்தார்கள்.

Man-Daughter Recreate Maternity Pictures With His Late Wife

ஆனால் இவர்களுக்கு ஒரு பெரும் கவலை மட்டும் இருந்து கொண்டு இருந்தது. அதாவது இந்த தம்பதிக்குக் குழந்தை இல்லை என்பது தான் அந்த கவலை. இதற்காகப் பல மருத்துவர்களைச் சந்தித்தும், பல மருத்துவமனை வாசலில் ஏறி இறங்கியும் எந்த பலனும் இல்லாமல் போனது. ஆனால் இருவரும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், இறுதியாக Yesenia கர்ப்பமடைந்தார். இதனால் இருவரும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றார்கள்.

இதற்கிடையே நிறைமாத கர்ப்பிணியான Yeseniaவுடன் அவரது கணவர் James Alvarez வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது டீரென ஜீப் ஒன்று சாலையைத் தாண்டி நடைபாதையில் ஏறி Yesenia மீது மோதியுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட Yeseniaவின் வயிற்றிலிருந்த குழந்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. ஆனால், மருத்துவர்களால் Yeseniaவைக் காப்பாற்ற முடியவில்லை.

Man-Daughter Recreate Maternity Pictures With His Late Wife

Yesenia மீது காரை மோதியதற்காகக் கைது செய்யப்பட்ட Courtney Pandolfi (40) என்ற பெண், ஏற்கனவே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டதற்காக அவரது ஓட்டுநர் உரிமம் ரத்துசெய்யப்பட்டிருந்ததுடன், Courtney விபத்தை ஏற்படுத்தியபோது, போதைப்பொருள் அருந்தி  இருந்ததும் தெரியவந்தது. இதனிடையே மனைவி மீது பேரன்பு கொண்ட James, மனைவியின் நினைவு நாளில் அவரது நினைவுகளை மீண்டும் கொண்டு வர முடிவு செய்தார்.

Man-Daughter Recreate Maternity Pictures With His Late Wife

அவர் தன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது அவருடன் என்னென்ன புகைப்படங்கள் எடுத்துக்கொண்டாரோ, அதே போன்ற புகைப்படங்களை தற்போது, அதே இடங்களில் அதே போல தன் மகளுடன் எடுத்துக்கொண்டுள்ளார். தன் மகள் Adalynயின் பிறந்தநாளும், தன் மனைவி Yeseniaவுடைய இறந்த நாளும் ஒன்று என்பதால், அன்று தன் மனைவியின் நினைவாகவும், தன் மகளின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகவும் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார்.

Man-Daughter Recreate Maternity Pictures With His Late Wife

அந்த புகைப்படங்களில் கள்ளங்கபடமற்ற சிரிப்புடன் Adalyn சிரிப்பதைப் பார்த்தால் பலரது மனங்களைக் கொள்ளை கொண்டாலும் அவரது மனைவியின் மரணம் நமது கண்முன்னாடி கொண்டு வரும்போது கண்களில் கண்ணீர் வருவதை நிச்சயம் தவிர்க்க முடியாது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man-Daughter Recreate Maternity Pictures With His Late Wife | World News.