எட்டு இளம்பெண்களால் உயிரிழந்த நபரா ..? கனடாவை அதிரவைத்த பரபரப்பு சம்பவம்..

முகப்பு > செய்திகள் > உலகம்

By K Sivasankar | Jan 11, 2023 06:19 PM

கனடாவின் டொரண்டாவில் வீடுற்ற நபர் ஒருவரை 8 இளம் பெண்கள் சேர்ந்து கொடூரமாக படுகொலை செய்ததாக கூறப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Ken Lee, 59, alleged Killed by 8 girls in Toronto Canada

                          Images are subject to © copyright to their respective owners

Also Read | மான்கட் அவுட்டான இலங்கை கேப்டன்?.. பெரிய மனசோட ரோஹித் செஞ்ச விஷயம்.. மனுஷன் வேற ரகம்!!

கடந்த மாதம் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நேரத்தில் டொரண்டா அருகே உள்ள யார்க் பல்கலைக்கழகம் அருகே 59 வயது உடைய Ken Lee எனும் நபர் குற்றுயிரும் குலையுயிருமாக  படுகாயம் அடைந்த நிலையில் இருந்ததை அடுத்து, அவரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்துவிடார்.

இதனை அடுத்து அவரை குறித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் Ken Lee வீடற்ற இளைஞர் என்று தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன. 59 வயதான  Ken Lee பற்றி அக்கம்பக்கத்தினர் கூறிய தகவல்களைத் தொடர்ந்து, இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், இவரை சுமார் 8 பெண்கள் சேர்ந்து சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்து விட்டதாக தகவல்கள் கூறப்பட்டு வருவது மேலும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

Ken Lee, 59, alleged Killed by 8 girls in Toronto Canada

Toronto Police Service handout

இது தொடர்பான தகவல்களை வழக்கறிஞர் Gru திரட்டி இருக்கிறார். குறிப்பிட்ட குற்றம் சாட்டப்பட்ட அந்த 8 இளம் பெண்கள் Ken Lee -யிடமிருந்து மதுபான போத்தலை பறிக்கும்போது இந்த சண்டை உருவானதாகவும் இறுதியில் இந்த சண்டை கொலையில் சென்று முடிந்ததாகவும் கூறப்படுகிறது. அத்துடன் இந்த பெண்கள் கனடாவின் வேறு வேறு பகுதிகளில் இருந்து சமூகம் ஊடகம் வாயிலாக நட்பாகி ஒரே இடத்தில் கெட் டுகெதரில் ஈடுபட்டதாகவும், அப்போதுதான் இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

Ken Lee, 59, alleged Killed by 8 girls in Toronto Canada

Gru, Toronto advocate  (Evan Mitsui/CBC)

மேலும் இச்சம்பவத்தின் உண்மை பின்னணி தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது.

Also Read | "யார் அந்த தேவதை".. மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விராட் கோலி.. அந்த கேப்ஷன் தான்😍..!

Tags : #KEN LEE #TORONTO #CANADA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ken Lee, 59, alleged Killed by 8 girls in Toronto Canada | World News.