ஒரே கம்பெனில அதிக வருஷம் வேலை பார்த்ததற்காக கின்னஸ் ரெக்கார்டு.. அசத்தும் 100 வயது தாத்தா..! எத்தனை வருஷம் தெரியுமா ?
முகப்பு > செய்திகள் > உலகம்ஒரே நிறுவனத்தில் அதிக ஆண்டுகள் பணி புரிந்ததற்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளார் பிரேசில் நாட்டைச் சேர்ந்த நூறு வயது தாத்தா ஒருவர்.

Also Read | ஹெல்மெட் போட்ருந்தா சாக்லேட்.. இல்லைன்னா இத பண்ணுங்க.. SP எடுத்த அதிரடி நடவடிக்கை..!
பெரும்பாலான நபர்களுக்கு ஒரே வருடத்தில் பல நிறுவனங்கள் மாறிய அனுபவம் இருக்கும். ஆனால் பிரேசில் நாட்டைச் சேர்ந்த வால்டர் ஆர்த்மன் என்ற 100 வயது முதியவர் 84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இதற்காக அவருடைய பெயர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இது உலக அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
84 வருடங்கள்
பிரேசில் நாட்டின் புருஸ்க்யூ பகுதியிலுள்ள ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் கடைநிலை ஊழியராக சேர்ந்தவர்தான் இந்த ஆர்த்மன். அதிலிருந்து தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் செய்யக் கற்றுக் கொண்ட அவர் தொடர்ந்து படிப்படியாக முன்னேற்றம் அடைந்து உள்ளார். இதனால் அவருக்கு விற்பனை மேலாளர் பதவியும் கிடைத்திருக்கிறது. தற்போது 100 வயதாகும் ஆர்த்மன் அதே உற்சாகத்துடன் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரை சக ஊழியர்கள் மிகுந்த மரியாதையுடன் நடத்திவருகின்றனர்.
அர்ப்பணிப்பு
ஒரே நிறுவனத்தில் அதிக ஆண்டுகள் பணி புரிந்ததற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது குறித்து பேசிய ஆர்த்மன் "பணியை விரும்பி செய்தால் ஒரே நிறுவனத்தில் நிச்சயம் அதிக காலம் நீடிக்க முடியும். அர்ப்பணிப்புடன் பணியாற்றுவது போல ஆரோக்கியத்திலும் உரிய கவனம் செலுத்த வேண்டும். நான் பெரும்பாலும் வயிற்றுக்கு ஒவ்வாத அதிக உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்த்து விடுவேன். மேலும் தினசரி உடற்பயிற்சி செய்து வருகிறேன். இதுவே என்னுடைய ரகசியம்" என்றார்.
தன்னுடைய பணியை விரும்பி செய்துகொண்டே இருந்தால் அதற்கும் அங்கீகாரம் கிடைக்கும் என நிரூபித்து கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ள ஆர்த்மனை பலரும் அதிசயத்துடன் வாழ்த்தி வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
