‘யாரு சாமி இவங்க..!’ JCB வண்டியால் ATM-ஐ உடைச்சு கொள்ளை.. மிரள வைத்த CCTV வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஏடிஎம் இயந்திரத்தை ஜேசிபி வாகனத்தை கொண்டு பெயர்த்து எடுத்துக் கொண்டு போன வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மநிலம் சாங்க்லீ பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. நேற்றிரவு ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் இங்கு வந்துள்ளனர். அப்போது ஒருவர் ஏடிஎம் மையத்தின் கதவை திறந்து வைத்துவிட்டு சென்றார்.
இதனை அடுத்து ஜேசிபி வாகனத்தின் மூலம் சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த ஏடிஎம் இயந்திரத்தை லாவகமாக தகர்த்து எடுத்துக்கொண்டு போயுள்ளனர். இவை அனைத்தும் ஏடஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#JCB Crane used to steal #ATM Machine in #Sangli #Maharshtra pic.twitter.com/1cb5t5RC75
— Satya Tiwari (@SatyatTiwari) April 24, 2022
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
