பொறுப்புள்ள 'பதவியில' இருக்குற... நீங்களே 'இப்படி' பண்ணலாமா...? 'நான் பண்ணினது தப்பு தாங்க...' - 'செய்த காரியத்திற்கு' மன்னிப்பு கேட்ட பிரிட்டன் அமைச்சர்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Jun 25, 2021 10:09 PM

தன் தோழிக்கு முத்தம் கொடுத்தாதற்காக பிரிட்டனின் சுகாதாரத் துறை அமைச்சர் மேட் ஹான்காக் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

Britain\'s Secretary Health apologized kissing his girlfriend

கடந்த ஆண்டு பிரிட்டனின் பிரபல இதழான சன் இதழில் திருமணமான மேட் ஹேன்காக், தனது தோழி ஒருவரை முத்தமிடும் படத்தை வெளியிட்டது.

சுகாதாரத் துரை அமைச்சர் முத்தமிடும் ஃபோட்டோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பொதுவாகவே வெளிநாடுகளில் நண்பர்களே முத்தமிடும் செயல் தவறாக நினைப்பதில்லை, சாதாரணமான விஷயம் என நினைக்கும் நமக்கு, இதில் என்ன தவறு இருக்கிறது என்று பலர் ஆச்சரியம் ஏற்படக்கூடும்.

ஆனால் இந்த விஷயத்தில் தோழியை முத்தமிட்டது அல்ல பிரச்சனை, கொரோனா பரவும் சமயத்தில் முத்தமிட்டதே இங்கு குற்றமாக பார்க்கப்படுகிறது.

கடந்த வருடம் பிரிட்டனில் கொரோனா வைரசால் பலர் உயிரிழந்து வந்த சமயத்தில் ஊரடங்கு மற்றும் சமூக விலகலை கடைபிடிக்க போரிஸ் ஜான்சன் அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை மீறுவோருக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சமூக விலகலைப் பின்பற்றாமல் சுகாதாரத்துறை அமைச்சர் தனது தோழியை இவ்வாறு முத்தமிட்டுள்ளார்.

இதன்காரணமாகவே கடந்தாண்டு தான் செய்த தவறுக்காகவும் சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோதும் சமூக விலகலை கடைபிடிக்காமல் இருந்ததற்காக மேட் ஹான்காக் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Britain's Secretary Health apologized kissing his girlfriend | World News.