'அடிபட்ட இடத்துல முத்தம் கொடுப்பேன்...' 'அப்பாவுக்கு உடனே சரியாயிடும்...' - புஜாரா மகளின் நெகிழ வைக்கும் அன்பு...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅப்பாவுக்கு அடிப்பட்ட இடங்களில் எல்லாம் நான் முத்தம் கொடுப்பேன் என்று புஜாராவின் மகள் அதிதி கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுடனான பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் 2-ஆவது இன்னிங்ஸில் புஜாரா, சுப்மன் கில்லுடன் இணைந்து மிகவும் சிறப்பாக விளையாடினார். புஜாராவின் அசாத்தியமான பேட்டிங்கை கண்டு ஆஸ்திரேலிய பவுலர்கள் மிரண்டனர். அதனால் அவருக்கு பவுன்சர் பந்துகள் அதிகமாக போடப்பட்டது. இதில் பல பவுன்சர்களை தனது உடலில் தாங்கி காயமடைந்தார்.
இந்த வலிகளை பொறுத்துக்கொண்டு அவர் தொடர்ந்து விளையாடி அரை சதமடித்தார். இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றில் புஜாரா தெரிவித்தபோது, "எப்போதெல்லாம் என் மகள் கீழே விழுகிறாளோ அப்போதெல்லாம் காயமடைந்த இடத்துக்கு நான் முத்தம் கொடுப்பேன். எனவே என் மகளும் முத்தம், காயங்களை ஆற்றும் என நம்புகிறாள்" என்று கூறினார்.
புஜாரா பவுன்சர்கள் காரணமாக காயமடைந்தபோது அவரின் மகள் அதிதி "அப்பா வீட்டுக்கு வந்ததும் அவர் காயமடைந்த இடங்களில் நான் முத்தம் கொடுப்பேன், அவருக்கு சரியாகிவிடும்" என கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்த புஜாரா "கிரிக்கெட்டின் தொடக்க காலத்தில் இருந்தே நான் பெயின் கில்லர் மருந்துகளை எடுத்துக் கொள்வதில்லை. வலியை பொறுத்துக்கொள்வேன், அதுவே எனக்கு பழகிவிட்டது. கிரிக்கெட்டில் அடிப்படுவது இயல்புதானே" என பெரிய மனதுடன் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
